மிளகு சற்று தூக்கலாக போட்டு காரசாரமான ஆட்டு ஈரல் வறுவல்! மணக்க மணக்க இனி செய்து ருசியுங்கள்
இறைச்சி வகைகளில் ஆட்டு இறைச்சியில் தான் அதிக சத்துகள் உள்ளது.
குறிப்பாக ஆட்டு இறைச்சியின் பாகங்கள் அனைத்துமே ஆரோக்கியம் நிறைந்ததாக இருக்கும்.
பொதுவாக சிலர் இறைச்சியை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். ஆட்டின் ஏனைய உறுப்புகளை ஒதுக்க வைத்து விடுவார்கள்.
ஆட்டின் கல்லீரலில் புரதச் சத்துகள் அதிகம் இருக்கிறது. ஆட்டு ஈரல் நம் உடலுக்கு தேவையான உயிர் சத்துக்கள் அனைத்தையும் சேமித்து வைத்து நம் உடலில் சத்து குறையும் பொழுது நம் உடலுக்கு கொடுக்க கூடிய முக்கியமான வேலை செய்கிறது.
இதில் முக்கியமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் அனைத்து வகையான உயிர் சத்துக்களும் நிறைந்து இருக்கும்.
குறைந்த அளவில் முழுமையான சத்துக்கள் கொடுக்கக்கூடிய ஒரே அசைவம் என்றால் அது ஆட்டு ஈரல் மட்டும்தான்.
இன்று ஆட்டு ஈரலில் சுவையான வறுவல் மிளகு சேர்த்து செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
ஆட்டு ஈரல் மிளகு வறுவல்
தேவையான பொருட்கள்
- ஈரல் - 500 கிராம்
- சின்ன வெங்காயம் - 150 கிராம்
- பச்சை மிளகாய் - 2 வர
- மிளகாய் - 5
- மிளகுத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
- கறிவேப்பிலை - இரண்டு
- கொத்து கொத்தமல்லி - சிறிதளவு
- எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை
காரசாரமான ஈரல் வறுவல் செய்வதற்கு சின்ன வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை நன்று பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பிறகு ஆட்டு ஈரலை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக வெட்டி வைத்து கொள்ளவும்.
நன்கு சுத்தம் செய்த ஈரலை போட்டு அதனுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
அடுப்பில் பாத்திரத்தினை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ஈரல் கலவையை சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.
ஈரல் முக்கால் பதம் வெந்தவுடன் நன்றாக கிளற விடுங்கள்.
பின்னர் மீதமுள்ள மிளகு தூளை தூவி கரண்டி போட்டு கிளற வேண்டும்.
இறுதியாக எண்ணெய் பிரிந்து வரும் போது அடுப்பை அணைத்து விடவும்.
கடைசியாக அதன் மீது கொத்தமல்லித்தழை தூவினால் காரமும் மணமும் கொண்ட மிளகு ஈரல் வறுவல் ரெடி.