Chef Venkatesh Bhat Recipe : ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே மட்டன் சுக்கா!
Chef Venkatesh Bhat Style Mutton Chukka : பொதுவாகவே அசைவ உணவுகளை விரும்பிச் சாப்பிடுபவர்களின் உணவுப் பட்டியலில் மட்டனுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அதிலும் மட்டனில் தயாரிக்கப்படும் பிரியாணி என்றால் சொல்லவே வேண்டாம்.
அதன் மணமும், சுவையும், மென்மையான இறைச்சித் துண்டுகளும் உணவுப் பிரியர்களை எளிதில் கவர்ந்துவிடும். பிரியாணி மட்டுமின்றி, மட்டனை வைத்து விதவிதமான சுவையான உணவு வகைகளையும் தயாரிக்க முடியும்.

அந்த வகையில், காரசாரமான மசாலாக்கள், நறுமணமிக்க மசாலாப் பொருட்கள் என அனைத்தும் ஒன்றிணைந்து, ஒவ்வொரு கவளத்திலும் அசத்தலான சுவையை வழங்கும் மட்டன் சுக்காவுக்கு எப்போதுமே தனி வரவேற்பு உண்டு.
வீட்டில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி ருசிக்கும் வகையில், செஃப் வெங்கடேஷ் பட் அவர்களின் சமையல் பாணியில், அசத்தல் சுவையில் மட்டன் சுக்காவை வீட்டிலேயே எப்படித் தயாரிப்பது என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மட்டனை வேகவைக்க: மட்டன் – 500 கிராம்
பச்சை மிளகாய் – 1
இஞ்சி பூண்டு விழுது – 1தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ½தேக்கரண்டி
மல்லித்தூள் – 1½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தாளிக்கவும் வறுக்கவும் - தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் – 1 முதல் 2 மேசைக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – 1 அங்குலத் துண்டு (பொடியாக நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 20 (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

செய்முறை
முதலில் மட்டனை வேகவைக்கக் கொடுத்துள்ள அனைத்துப் பொருட்களையும் குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, மட்டன் நன்றாக வேகும் வரை 7 முதல் 8 விசில் வரும் வரை வேகவிட வேண்டும்.
அதனையடுத்து சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கடுகு வெடித்ததும் கறிவேப்பிலை, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சில நொடிகள் வதக்கிவிட்டு, இப்போது நறுக்கிய சின்ன வெங்காயத்தைச் சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு வரும் வரையில் வதக்கி, அதனுடன்வேகவைத்த மட்டனை, வேகவைத்த தண்ணீருடன் சேர்த்து நன்றாகக் கலந்துவிட்டு தண்ணீர் வற்றும் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும், தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து, மட்டன் நன்றாக வறண்டு வரும் வரை வறுத்து இறக்கினால் அவ்வளவு தான் வையான மட்டன் சுக்கா தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |