நாவை கட்டிப்போடும் மட்டன் சொப்ஸ்!
மட்டன் உண்பதற்கு பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அதன் சுவை அனைவரது நாவையும் நிச்சயம் கட்டிப்போட்டுவிடும். இப்போது மிகவும் அருமையான சுவையான மட்டன் சொப்ஸ் எப்படி செய்யலாம் எனப் பார்ப்போம்...
தேவையான பொருட்கள்
மட்டன் சொப்ஸ் - 1 கிலோ
முட்டை - 1
மசாலாத் தூள் - 2 தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் டீஸ்பூன்
வெங்காயம் - 2
நெய் - 125 கிராம்
வினிகர் - 1 மேசைக்கரண்டி
தயிர் - 50 கிராம்
மிளகு - 6
வெள்ளை பூண்டு -6
இஞ்சி - 2
பட்டை - அரை அங்குலம்
ப்ரெட் தூள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் வெங்காயம், வெள்ளை பூண்டு, மிளகு, பட்டை, இஞ்சி, பட்டை என்பவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரைத்த விழுதில் மிளகாய் தூள், வினிகர், தயிர், மசாலா தூள், உப்பு என்பவற்றை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
பின்னர் அதில் சொப்ஸ் துண்டுகளைப் போட்டு கிளறி ஒரு மணி நேரம் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதன்பின்னர் இறைச்சியை வினிகர் இல்லாமல் வடித்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கடுத்ததாக, முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அதை நன்றாக அடித்து கலக்கியதன் பின்னர், ஊற வைத்துள்ள இறைச்சி துண்டுகளை அதில் போட்டெடுத்து ப்ரெட் தூளின் மீது புரட்டிக் கொள்ளவும்.
வாணலியில் இரண்டு கரண்டி நெய்விட்டதன் பின்னர் இறைச்சி த் துண்டுகளை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.