இனி ஹோட்டலில் வேண்டாம்... வீட்டிலேயே செய்யலாம்! முட்டைகோஸ் மஞ்சூரியன்
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வீட்டு வேலைகளை செய்து முடித்தவுடன் ஏதாவது புதுவிதமாக உணவுகளை செய்து குடும்பத்தினரை சந்தோசப்படுவார்கள் என்பதற்காக புதிய புதிய உணவுகளை வீட்டிலேயே தயாரிப்பார்க்கள்.
அப்படியான குடும்பத் தலைவிகளுக்கு ஹோட்டலில் ஏதாவது சாப்பிட்டால் கூட அதை வீட்டில் செய்தாக வேண்டும் என்று எண்ணும் அளவிற்கு ஒரு உணவுதான் இந்த முட்டைகோஸ் மஞ்சூரியன்.
இந்த ரெசிபியை நீங்கள் வீட்டில் செய்து கொடுத்துப்பாருங்கள்.
பொரிப்பதற்கு
- 3 கப் முட்டைகோஸ் (நறுக்கியது)
- 1 வெங்காயம் (நறுக்கியது)
- 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
- 1 தேக்கரண்டி மிளகாய் தூள்
- 3 மேசைக்கரண்டி சோள மா
- 5 மேசைக்கரண்டி மைதா மா
- உப்பு தேவையான அளவு
முதலில் ஒரு பாத்திரத்தில் மேலே சொன்ன பொருட்களை எல்லாம் சேர்த்து கலந்துக் கொள்ளவும். கலந்துக் கொண்ட கலவையை பொன்னிறமாகும் வகையில் பொரித்து எடுத்துக் கொள்ளுங்கள்.
மசாலா தயாரிக்கும் முறை
- 3 மேசைக்கரண்டி தேங்காய் எண்ணெய்
- 2 பெரிய வெங்காயம் (நறுக்கியது)
- 2 காய்ந்த மிளகாய்
- 2 மேசைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
- கறிவேப்பிலை
- 1/2 தேக்கரண்டி கரம் மசாலா
- 1/2 தேக்கரண்டி மல்லித் தூள்
- 3 தேக்கரண்டி மிளகாய் தூள்
- உப்பு தேவையான அளவு
- 2 தக்காளி (அரைத்தது)
மசாலா தயாரிப்பதற்காக ஒரு பாத்திரத்தில் எண்ணேய் ஊற்றி பெரிய வெங்காயம், காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலை என்பற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் கரம் மசாலா, மல்லித் தூள், மிளகாய் தூள் உப்பு என்பவற்றையும் சேர்த்து கிளறிக் கொள்ளவும். பின்னர் அரைத்த தக்காளியை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறி விடவும்.
பிறகு கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து அதில் பொரித்து எடுத்துக் கொண்ட முட்டைக் கோஸை மசாலாவுடன் சேர்த்து 3 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லியை மேலாக தூவி விட்டு இறக்கினால் முட்டைக் கோஸ் மஞ்சூரியன் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |