தமிழர்களின் உணவில் முக்கியமான கடுகு! சமையலுக்கு சேர்ப்பதற்கு காரணம் என்ன?
இந்திய உணவுகளில் முக்கிய இடம் பிடித்திருக்கும் கடுகு விதைகள் எண்ணற்ற வைட்டமின் மற்றும் தாதுக்களைக் கொண்டுள்ளது.
இந்த கடுகு விதைகள் ஆரம்பத்தில் ஐரோப்பா பகுதியில் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது வட ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா நாடுகளில் பிரபலமாகியுள்ளது.
பொதுவாக நாம் சமைக்கும் உணவிற்கு மேலும் சுவையூட்ட இந்த கடுகு விதைகளைக் கொண்டு தாளிப்பது உண்டு.
கடுகு விதைகள் இரத்த சர்க்கரை அளவை குறைத்து, நோய் மற்றும் தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்க உதவுகிறது.
கடுகில் இருக்கும் சத்துக்கள்
கடுகில் கல்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம், தாது உப்பு, வைட்டமின்கள், ஆக்சிடெண்டுகள், சல்பர், அப்லோ டாக்சின், சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் சத்துக்கள் காணப்படுகின்றது.
கடுகின் நன்மைகள்:
தலைவலிக்கு நிவாரணம்
சரும ஆரோக்கியம்
செரிமான பிரச்சினையை தீர்க்கும்
எலும்பு, பற்கள், ஈறுகளை வலுவாக்கும்
கடுகு எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்தலாம்?
பூஞ்சை தொற்று நோய்க்கு தீர்வு அளிப்பதுடன், ஜலதோசத்தை குணப்படுத்தவும், முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்கின்றது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இவை பல மருத்துவ பலன்களையும் அளிக்கின்றது.
சமையல் மட்டுமின்றி, கடுகு எண்ணெய்யை காய்கறி சாலட் மற்றும் குழந்தைகளுக்கு உடம்பு, தலை இவற்றினை மசாஜ் செய்தால் எந்தவொரு உடல் தொந்தரவும் ஏற்படாதாம்.
பல் துலக்குவதற்கு முன்பு, கொஞ்சம் கடுகு எண்ணெயை வாயில் ஊற்றி, சிறது நேரம் வைத்திருந்து கொப்பளித்தால், பற்களில் உண்டாகும் நோய் தொற்று, ஈறுகளில் உண்டாகும் வீக்கம், ரத்தம் கசிதல் போன்றவை சரியாகும்.
பற்களில் ஏற்படும் கறைகளை போக்க, பல் தேய்த்து முடித்ததும் கடுகு எண்ணெய்யை சிறிது எடுத்துக் கொண்டு, அதில் நான்கு சொட்டு எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு சேர்த்து வாயில் ஊற்றி இரண்டு நிமிடங்ள் வைத்து கொப்பளிக்க வேண்டும்.