புற்றுநோயை விரட்டி இதயத்தை பாதுகாக்கும் கடுகு! இன்னும் பல நன்மைகள்
பொதுவாக நமக்குள் ஏற்படும் பல நோய்களுக்கு மருந்து நம் வீடுகளிலேயே இருக்கின்றது.
இது தெரியாமல் நாம் பல நோய்களுக்கு மருந்து தேடி கடை கடையாய் அலைந்து கொண்டிருக்கிறோம்.
அந்த வகையில் வீடுகளில் இருக்கும் வெந்தயம், கடுகு, சீரகம், வெங்காயம், பூண்டு இவற்றில் எண்ணில் அடங்காத மருத்தவ குணங்கள் இருக்கின்றன.
உணவுடன் இதனை சரியாக எடுத்து கொண்டால் வெளியில் மருந்திற்கு அலைய வேண்டிய தேவை இருக்காது.
இதன்படி, உருவத்திற்கு மிகச் சிறியதாக இருக்கும் கடுகில் அப்படி என்ன மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதனை தெரிந்து கொள்வோம்.
குட்டி கடுகில் மறைந்திருக்கும் சில உண்மைகள்
Image - NetmeDs
1. மீன்களில் மாத்திரம் காணப்படும் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கடுகில் உள்ளது, இது இதயத்திற்கு பலம் சேர்க்கும் என கூறப்படுகிறது.
2. கடுகில் இருக்கும் மருத்துவ பண்புகள் பெருங்குடலில் ஏற்படும் புற்றுநோயை வரவிடாமல் தடுக்கிறது.
3. தற்போது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் நோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று. இதனை கடுகு குணப்படுத்தும் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அந்தளவு மருத்துவ சக்தி கடுகிற்கு இருக்கின்றது.
4. விஷப்பூச்சிகள் கடித்துவிட்டால், அந்த விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு இருக்கிறது.
5. எப்போது இளமையாகவே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். கடுகை தினமும் சேர்த்து கொள்ளலாம். ஏனெனின் இளமையின் சாவி கடுகிடம் இருக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |