ஆடை இல்லாமல் பள்ளிக்கு வரக்கூறிய ஆசிரியர்: அதிர்ச்சியில் மாணவர்கள்
பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்த மாணவிகளை ஆடை அணியாமல் வரக்கோரிய ஆசிரியரால் சர்ச்சை எழுந்துள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ராதேஷ்யாம் மாளவியா என்பவர் முதல்வராக இருந்து வருகின்றார்.
கடந்த சனிக்கிழமை அன்று 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகள் பள்ளிக்கு சீருடை அணியாமல் வந்ததைக் கவனித்த முதல்வர் சீருடை எங்கே என்று கேட்டுள்ளார்.
மாணவிகள் இன்னும் தைக்கவில்லை என்று பதில் கூறவே, அதற்கு ஆபாசமாக மாணவிகளை திட்டியுள்ளார்.
அதுமட்டுமின்றி பேஷனாக உடையணிந்து கொண்டு மாணவர்களைக் கெடுப்பதே நீங்கள் தான், இனிமேல் பள்ளி யூனிபார்ம் இல்லேன்னா டிரெஸ்ஸே இல்லாம வாங்க.. என்று கடுமையாக திட்டி இருக்கிறார்.
இச்சம்பவத்தினை மாணவிகள் பெற்றோரிடம் கூறவே, பள்ளி முதல்வரைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது பள்ளி முதல்வர் தலைமறைவாகியுள்ள நிலையில், பொலிசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
மேலும் முதல்வர் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
ஆசிரியரை கைதுசெய்ய பொலிசார் தீவிரம் காட்டி வரும் நிலையில் தலைமறைவாக இருக்கும் அவரை தேடி பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு இருக்கிறது.