அல்லாவின் பெயரைக் கூறி சாபமிட்ட நபர்... பொண் பொலிசார் செய்த தவறு என்ன?
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முழு ஊரடங்கு 4 முறை அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இன்று முதல் ஜுன் 14ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதிலும், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகளுடனும், பிற மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர்த்து, வெளியே நடமாடி வருபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.
அதிலும், எந்தவித காரணமும் இல்லாமல் ரோந்து வருபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தும் அதிரடி காண்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அநாவசியமாக வெளியே வந்ததால், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த பெண் பொலிஸை இஸ்லாமிய நபர் ஒருவர் வாய்க்கு வந்ததை போல வசை பாடி, சாபம் விட்ட சம்பவம் அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
போலீசார் எடுத்த அந்த வீடியோவில், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், அமைச்சர் சேகர் பாபுவிற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரிடம் பேசுமாறு போலீசாரிடம் அவர் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், அதற்கு பெண் காவலர்கள் மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால், ஆத்திரமடைந்த நபர், பெண் பொலிசாருக்கு சாபம்விட்டு பேசிய காணொளி தீயாய் பரவி வருகின்றது.
இன்னா பாய் சாபம் லாம் விடுற....அப்படி யார்தான் அந்த போன்.லைன் ல இருக்கா....
— Jayam.SK.Gopi (JSK.Gopi) (@JSKGopi) June 7, 2021
தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ???? pic.twitter.com/TyxGBrOis2