இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா? வாயடைத்துப் போன ரசிகர்கள்
இந்தியாவின் பணக்கார பாடகரும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் கோடிக்கணக்கான சொத்துக்கு சொந்தக்காரர் இவரின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான்
‘ரோஜா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரகுமான். இப்படத்தின் வெற்றியின் மூலம் தொடர்ந்து பல படங்களின் தனது இசையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து உலகளவில் பிரபலமாகியுள்ளார்.
இவர் இசையில் தற்போது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களில் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
தமிழ், இந்தி , ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.
ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். மேலும் இத்திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதும் , பாஃப்டா விருதும் கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரேயாவார்.
இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்ம பூசண் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்படுகிறார். 2017 ஆம் ஆண்டு இவருக்கு தமிழ் ரத்னா விருது வழங்கி அமெரிக்கா தமிழ் சங்கம் கவுரவித்துள்ளது.
எவ்வளவு உயரம் சென்றாலும் எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்லி எளிமையின் சிகரமாக இருந்து வருகிறார் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் இன்றைய தலைமுறையினரை கவரும் வகையில் பாடல்களை கொடுத்து இன்றளவும் டாப் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார்.
சொத்து மதிப்பு
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது வாங்கும் சம்பளத்தை பற்றி பேசினால், இவர் ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ.8 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். இதுதவிர இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி அதன் மூலமும் கோடி கோடியாய் சம்பாதித்து வருகிறார்.
இதுதவிர பாடகராகவும் தன்னுடைய முத்திரையை பதித்து பல்வேறு வெற்றிப்பாடல்களைப் பாடி இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான். இவரது ஆண்டு வருமானம் மட்டும் ரூ.50 கோடி இருக்குமாம். மேலும் ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.4 கோடி சம்பாதித்து வருகிறார்.
அந்த வகையில் இவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ.600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமாக சொகுசு வீடுகள் உள்ளன.
இதுதவிர பிலிம் ஸ்டூடியோ ஒன்றையும் சென்னையில் வைத்திருக்கிறார். அண்மையில் துபாயில் பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட இசைக்கூடம் ஒன்றையும் தொடங்கியுள்ளர்.
அதுமட்டுமின்றி லாஸ் ஏஞ்சல்ஸில் அவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பும் இவர் வைத்துள்ளார். இவரிடன் ஜாகுவார், மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள் உள்ளன.
இதன் மூலம் தற்போது இந்த சினிமாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |