இரண்டாவது மனைவிக்கு மூன்று கண்டிஷன் போட்ட டி இமான்.... திருமணத்திற்கு முன்பே இப்படியா?
இசையமைப்பாளர் டி இமான் அண்மையில் மனைவியை விவாகரத்து செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது இமான் மறுமணம் செய்து கொள்ளப்போவதாக கோலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்னையை சேர்ந்த உமா என்பவருக்கும் இமானுக்கும் வரும் மே மாதம் திருமணம் நடக்க இருக்கிறது.
இது பெரியவர்கள் பேசி நிச்சயக்கப்பட்ட திருமணம் என்று கூறுகிறார்கள். இமான் வீட்டார் மற்றும் உமாவின் வீட்டார் இதுதொடர்பாக பேசி முடிவு செய்துள்ளார்களாம். விரைவில் இது தொடர்பாக இமான் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று கூறுகிறார்கள்.
இப்படி ஒரு ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இமான், விவாகரத்து மிகப்பெரிய விஷயம், எப்போது ஆண் மீதுதான் குற்றம் சொல்வார்கள்.
ஆனார் யார் மீது வேண்டுமானாலும் குற்றம் இருக்கும். நான் என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடக்க கூடாது என விரும்பினேன். ஆனால் நடந்துவிட்டது, எனது குழந்தைகளை என் மூச்சு இருக்கும் வரை விடமாட்டேன்.
எனது முன்னாள் மனைவி நிறைவான வாழ்க்கையை வாழவேண்டும், அவளுக்கு பிடித்த வாழ்க்கையை அவள் வாழட்டும் என கூறியுள்ளார்.
கண்டிஷன் போட்ட டி இமான்....
இமான் தனது மறுமணம் குறித்து தான் மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும் தனக்கு வரும் மனைவி கண்டிப்பாக விதவை அல்லது விவாகரத்து பெற்றவராக இருக்க வேண்டும் என்றும், ஒரு பெண் குழந்தைக்கு தாயாக இருக்க வேண்டும் என்றும், தன்னுடைய குழந்தைகளிடம் அன்புடன் இருப்பவராக இருக்க வேண்டும் என்றும் மூன்று நிபந்தனைகளை விதித்துள்ள்ளார்.
இனியும் பொறுக்க முடியாது! தனுஷை காலி செய்ய மாமியார் லதா ரஜினிகாந்த் போட்ட ஸ்கெட்ச்
you may like this...