மலைப்போல் குவியும் பணம்.. ஏ.ஆர்.ரஹ்மானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் பணக்கார பாடகரும் இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரஹ்மானின் முழு சொத்து விவரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான்
சிறு வயது முதல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து இசைத்துறையில் சாதித்தவர் தான் ஏ.ஆர்.ரகுமான்.
இவர் மணிரத்னம் இயக்கத்தில் 1992ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்த படத்தில் வெளியான பாடல்கள் யாவும் இன்று வரை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்தளவு வாய்ப்பை தேடி கொடுத்துள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவராக காணப்படுகிறார்.
ரஹ்மான் எவ்வளவு உயரம் சென்றாலும் எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்லி எளிமையின் சிகரமாக இருந்து வருகிறார். இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 வருடங்களை கடந்த நிலையில் இவரிடம் எவ்வளவு சொத்துக்கள் இருக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
சொத்து விவரங்கள் இதோ!
பிஸியாக இருக்கும் ரஹ்மான் வருடத்திற்கு 50 கோடி வரை சம்பாரிக்கிறாராம். அத்துடன் ஒரு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.4 கோடி சம்பாதித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து ரஹ்மானிடம் ரூ.600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமாக சொகுசு வீடுகள் உள்ளன.
இது தவிர பிலிம் ஸ்டூடியோ ஒன்றையும் சென்னையில் வைத்திருக்கிறார். அண்மையில் துபாயில் பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட இசைக்கூடம் ஒன்றையும் தொடங்கினார். அத்துடன் லாஸ் ஏஞ்சல்ஸில் அவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பும் இவர் வைத்துள்ளார்.
இவரிடன் ஜாகுவார், மெர்சிடிஸ் பென்ஸ், வால்வோ போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள் உள்ளன.
இவ்வளவு சொத்துக்களை வைத்திருப்பதால் அதிகம் சொத்து வைத்திருக்கும் இசையமைப்பாளராக பார்க்கப்படுகிறார்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |