மற்றுமொரு சோக செய்தி..பிரபல இசையமைப்பாளர் மாரடைப்பால் காலமானார்!
பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் ராஜ் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சோகச் செய்தி
தெலுங்கு சினிமாவில் ராஜேஸ்வர ராவ் மகன் கோட்டியுடன் கூட்டு சேர்ந்து ராஜ்-கோட்டி என்ற பெயரில் இரட்டை இசையமைப்பாளர்களாக பணியாற்றி வந்தவர் தான் ராஜ்.
இதனை தொடர்ந்து ஏஆர் ரஹ்மானுடன் இணைந்து ஒரே குழுவாக பணியாற்றி பிரபலமானார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ராஜ் நேற்று மாரடைப்பு ஏற்பட்டு அகால மரணமடைந்தார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தெலுங்கு திரையுலகிற்கு இது பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவரின் இறுதிச்சடங்கு இசையமைப்பாளர் ராஜ்-இன் இறுதிச் சடங்கு இன்று ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.