கனடா தெருவுக்கு தமிழர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர்...உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இந்தியர்கள்!
கனடாவின் மார்கம் நகரிலுள்ள ஒரு தெருவுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டது குறித்து நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் நன்றி கூறி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில்,
இதை என் வாழ்நாளில் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. கனடாவின் மார்க்கம் மேயர், ஆலோசகர்கள், இந்திய தூதரக ஜெனரல் மற்றும் கனடா மக்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய பெயர் அல்ல
மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய பெயர் அல்ல அதற்கு "இரக்கமுள்ளவர்" என்று அர்த்தம். . “இரக்கமுள்ளவர் என்பது நம் அனைவருக்கும் இருக்கும் பொதுவான கடவுளின் குணம்.
ஒருவர் இரக்கமுள்ளவரின் ஊழியராக மட்டுமே இருக்க முடியும்.
எனவே அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக. அனைத்து அன்புக்கும் இந்தியாவின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழரான ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த இந்த உயரிய அங்கிகாரம் ஒட்டுமொத்த தமிழர்களையும் பெருமை கொள்ள செய்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.







