காளானை ஒரே மாதிரியா சமைக்கிறீங்களா? தோசை, சப்பாத்திக்கு இப்படி சமைத்து பாருங்க
Mushroom Potato Masala: தோசை, சப்பாத்திக்கு அருமையான சைடிஷ் காளான் உருளைக்கிழங்கு மசாலா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக காளான் என்பது அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கின்றது. சத்துக்கள் நிறைந்த காளானில் பல வகைகள் உள்ளதுடன், குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
தோசை, சப்பாத்திக்கு காளான் கிரேவி அருமையான கலவையாக இருக்கும். காளானை வழக்கம்போன்று சிக்கன், முட்டை கிரேவி செய்வது போன்று செய்யலாம் சற்று வித்தியாசமாக உருளைக்கிழங்கு சேர்த்து காளான் மசாலா எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்
2 உருளைக்கிழங்கு
200 கிராம் காளான்கள்
2 ஸ்பூன் எண்ணெய்
1 பிரியாணி இலை
½ ஸ்பூன் சீரகம்
1 கப் நறுக்கிய வெங்காயம்
2 பச்சை மிளகாய்கள்
1 ½ ஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
2 நறுக்கிய தக்காளி
1 ஸ்பூன் மிளகாய்த்தூள்
¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
10 முந்திரி பருப்புகள்
¼ ஸ்பூன் கசூரி மேத்தி
1 ஸ்பூன் கரம் மசாலா
ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகள்
தேவையான அளவு தண்ணீர்

செய்முறை
காளானை முதலில் நன்றாக சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை கழுவி தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்போது நறுக்கிய தக்காளி, முந்திரி பருப்பு இவற்றினை மிக்ஸி ஜாரில் மென்மையாக அரைத்து தனியாக எடுத்து வைக்கவும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய காளானை வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். அதே கடாயில் மீண்டும் எண்ணெய் சேர்த்து சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
இதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.

இதனுடன் தக்காளி விழுதையும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் கரம் மசாலா இவற்றினை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின்பு உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, கிரேவிக்கு தேவையான தண்ணீர் சேர்த்து மூடி வைத்து வேக விடவும்.
பின்பு காளான் மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிரேவி சரியான பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். கடைசியாக கொத்தமல்லி இலை தூவி பரிமாறினால் உருளைக்கிழங்கு காளான் மசாலா தயார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |