mushroom biryani: கறிசுவையை மிஞ்சும் காளான் பிரியாணி ... இப்படி செய்து பாருங்க
பிரியாணி யாருக்குத்தான் பிடிக்காது? அதுவும் குறிப்பாக இந்தியர்கர் பிரியாணிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
பிரியாணிக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உலகம் முழுவதும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது. அவ்வாறான பிரியாணி பிரியர்கள் பொதுவாக சிக்கள் பிரியாணி, மட்டன் பிரியாணி என அசைவ பிரியாணியை தான் அதிகம் விரும்புவார்கள்.
ஆனால் அசைவம் சாப்பிட முடியாதவர்களுக்கு காளான் ஒரு சிறந்த மாற்று உணவுப் பொருள். ஏனெனில் காளான் அசைவ உணவின் சுவையைத் தரக்கூடியது.
Karuppu Ulunthu Chutney: அசத்தல் சுவையில் சட்னி வேண்டுமா? கருப்பு உளுந்து கார சட்னியை செய்து பாருங்க
அத்தகைய காளானைக் கொண்டு கறிசுவையையே தோற்கடிக்கும் வகையில் வித்தியாசமான முறையில் அசத்தல் சுவையில் காளான் பிரியாணியை எப்படி தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி - 1 1/2 கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
சீரகம் - 1 தே.கரண்டி
சோம்பு - 1 தே.கரண்டி
ஏலக்காய் - 2
பிரியாணி இலை - 1
அன்னாசிப்பூ - 1
கிராம்பு - 4
பட்டை - சிறிய துண்டு
பெரிய வெங்காயம் - 2 (நீளவாக்கில் வெட்டியது)
மிளகாய் தூள் - 2 தே.கரண்டி
மல்லித் தூள் - 1 தே.கரண்டி
கரம் மசாலா - 1 தே.கரண்டி
தக்காளி - 2 (நறுக்கியது)
தயிர் - 1 மேசைக்கரண்டி
காளான் - 200 கிராம் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 2 1/4 கப்
அரைப்பதற்கு தேவையானவை
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
புதினா - சிறிதளவு
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து, பின்னர் அரிசி மூழ்கும் அளவில் நீரை ஊற்றி, 20 நிமிடங்கள் வரையில் நன்றாக ஊறவிட வேண்டும்.
அதனையடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், சோம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, அன்னாசிப்பூ, கிராம்பு, பட்டை ஆகியவற்றை போட்டு தாளித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதற்கிடையில் ஒரு மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பச்சை மிளகாய், புதினா ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
வெங்காயம் நன்றாக வதங்கிய நிலையில், அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றான வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் நன்றான கிளறிவிட்டு வதக்க வேண்டும்.
அதனையடுத்து தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கி, அதன் பின்னர் தயிரை சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் காளானை துண்டுகளாக்கி சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி, தண்ணீர் வரும் வரையில் கிளறி விட்டு நன்றாக வேகவிட வேண்டும்.
அதன் பின்பு அதில் 2 1/4 கப் தணணீர் சேர்த்து கிளறி, கொதிக்கவிட்டு, அதில் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து கிளறிவிட்டு, குக்கரை மூடி மிதமான தீயில் வைத்து 1 விசில் வரும் வரையில் வேக வைத்து இறக்கினால் அவ்வளவு தான் அட்டகாசமான சுவையில் காளான் பிரியாணி தயார்.
onion chutney: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வெங்காய சட்னி... கிராமத்து பாணியில் எப்படி செய்வது?
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |