உடலில் இரும்புச்சத்து குறைப்பாடா... தினமும் இந்த சூப் குடித்தால் போதும்
நமது உடலுக்கு தேவையான சத்துக்களில் இரும்புச்சத்து மிக முக்கியமாகும். அதனால் இரும்புசத்து குறைவாக இருப்பவர்களுக்கு முருங்கை இலை அதிக நன்மைகளை கொடுக்கிறது.
பொதுவாக முருங்கை மரத்தை, மருத்துவ பொக்கிஷம் என்று தான் சொல்ல வேண்டும். இது எண்ணற்ற வியாதிகளுக்கு பல வகைகளில் மருந்தாகிறது. முருங்கை மரத்தின் வேரிலிருந்து இலை வரைக்கும் அத்தனைமருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது.
அந்தவகையில் முருங்கைக் கீரையும் அதிக சத்துக்களை அள்ளி வழங்குகிறது. இந்த முருங்கை கீரையில் சூப் செய்து குடித்தால் உடலில் பல நன்மைகள் நடக்கும்.
[DWH1OO ]
தேவையான பொருட்கள்
- முருங்கைக் கீரை
- வெண்ணெய்
- பூண்டு
- சின்ன வெங்காயம்
- தக்காளி
- உப்பு
- மஞ்சள் தூள்
- மிளகு தூள்
- சீரகம்
செய்முறை
ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து சீரகம் தாளித்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்
பிறகு அதில் தக்காளி சேர்த்து வதக்கவும் நன்றாக வதங்கியதும் அதில் முருங்கை கீரை சேர்த்து அதனுடன் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து வேக விடவும்
கீரை வெந்தவுடன் வேக வைத்த பருப்புடன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், பூண்டை நசுக்கி சேர்த்து கொள்ள வேண்டும்
கடைசியாக சோளமாவில் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து சூப்பில் சேர்த்தால் சத்தான ஆரோக்கியமான முருங்கை கீரை சூப் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |