ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் முருங்கை கீரை கடையல்... இப்படி செய்து பாருங்க
முருங்கை பாரம்பரிய ஆயுர்வேத மருந்துகளில் நீண்ட காலமாக பயன்படுத்தப்படும் அளப்ரிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒரு கீரை வகையாக காணப்படுகின்றது.
முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து ஆகியன செறிந்து காணப்படுகின்றது.மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
மேலும் வயதாவதை தாமதப்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் முருங்கை கீரை கொண்டுள்ளது.
இவ்வள மருத்துவ குணங்கள் கொண்ட முருங்கை கீரையை பெரும்பாலானவர்கள் சாப்பிடுவதே கிடையாது. அசத்தல் சுவையில் அனைவரும் விரும்பும் வகையில் எவ்வாறு முருங்கை கீரை கடையல் செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள்
முருங்கைக்கீரை - 2 கப்
துவரம் பருப்பு - அரை கப்
பூண்டு - 10 பல்
சோம்பு - ஒரு தே.கரண்டி
சீரகம் - 2 தே.கரண்டி
கடுகு - 1 அரை தே.கரண்டி
உளுந்து - அரை தே.கரண்டி
சின்ன வெங்காயம் - 10 முதல் 20
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - அரை தே.கரண்டி
பெருங்காயம் - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
நல்லெண்ணெய் - 2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை
முதலில் துவரம் பருப்பை மற்றும் முருங்கைக்கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு குக்கரில் துவரம் பருப்பை போட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ,மஞ்சள் தூள் மற்றும் இரண்டு பல் பூண்டு சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூமானதும், கடுகு உளுந்து, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் கழுவி சுத்தம் செய்து நறுக்கி வைத்திருக்கும் முருங்கைக் கீரையை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் வேக வைத்திருக்கும் துவரம் பருப்பையும் அதில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். நன்றாக வெந்ததும் பெருங்காயம் சேர்த்து அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.
10 நிமிடங்கள் ஆறவிட்டு மிதமான சூட்டில் இந்த பருப்புபை லேசாக கடைந்து விட வேண்டும்.கீரை தனியாக விளங்கம் அளவுக்கு கடைந்தால் போதும் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கியம் நிறைந்த முருங்கை கீரை கடையல் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |