இலங்கையில் பல அபூர்வங்கள் நிறைந்த முருகன் ஆலயம்! சித்தர்கள் காத்து வந்த ரகசியம் என்ன?
இலங்கையில், மொனராகலை மாவட்டத்தில், உள்ள முருக பெருமான் கோவிலை காலம் காலமாக சித்தர்கள் பாதுகாத்து வரும், அபூர்வ சித்த வனமாகிய கபில்வித்தைக்கு இந்த வருடம் பணம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரசித்த கோவிலானது, இது யாள வனவிலங்குகள் சரணாலயத்தின் மத்தியில் கும்புக்கன் ஆற்றின் தென்கரையில் மிகப்பண்டைய காலத்தில் முருகனுக்காக உருவான திறந்தவெளி மரக்கோயில். இங்கு தான் முருகப்பெருமான் ஆதியில் தவம் இருந்து சக்திகளை பெற்றதாக வரலாறு சொல்கிறது.
அதன் பின்னர் முருகன் கதிர்காமத்தில் சூரசம்ஹாரத்தை முடித்த பின் தனது தங்க வேலை எறிந்ததாகவும், அந்த வேல் ஓர் புளிய மரத்தில் வீழ்ந்ததாகவும், அப்புளிய மரத்தின் கீழ் ஆதி வேடர்கள் முருகனின் வேலை வைத்து வழிபட்டு வந்ததுள்ளனர்.
இந்த சக்தி வாய்ந்த கோயிலுக்கு செல்ல 12 சிற்றாறுகளைக் கடந்து 32 கி.மீ ட்ராக்டர் வண்டியில் மிக கடினமாக பயணம் செய்தே வனத்தை அடைய முடியும்.
இன்றும், யானைகள் ரூபத்தில் தேவர்கள் சித்தர்கள் கந்தர்வர்கள் வந்து இங்கு முருகனை வழிபடுவதை கண்ணுராக காணலாம். தற்போது வரை சிலரால் மட்டுமே செல்லக்கூடிய அபூர்வ வனத்திற்கு முருகன் அருள் இருந்தால் மட்டும் இவை சாத்தியமாகும் எனக்கூறப்படுவதுண்டு.
ஆதியில் கதிர்காமத்தில் போகர் பெருமான் வைத்து பூஜை செய்து காணாமல் போன நவாக்சரி யந்திரம், நவ பாஷாண வேல் இங்கு தான் இருப்பதாக பலரால் நம்பபடுகிறது. இந்த இடத்தை இன்றும் ஆதி கதிர்காமம் என்றே பழைய சிங்கள நூல்கள், மஹா வம்ச நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கபில வனமானது, முருகனுடைய குடியிருப்பு என அன்றே நூல்களில் கூறப்பட்டு உள்ளது. கபில வனம் ஒரு பெரிய தெய்வீக சக்தியின் தளம் என்று நம்பப்படுகிறது. அங்கு மக்கள் விரதம் இருந்து தினமும் செல்கிறார்கள்..
இங்கு முருக பெருமான் தனது ஒளி தேகத்தோடு கபில முனிவருக்கு காட்சி கொடுத்ததால் தான் இந்த வனத்திற்கு கபில வனம் என்ற பெயர் வந்ததாக வரலாற்று கூறப்படுகிறது.
இங்கு முருக பெருமான் ஒளி தேகத்தோடு நவகோடி சித்தர்களோடு நிஷ்டையில் அருள் புரிகிறார் என்றும், போகர் கதிர்காமத்தில் வணங்கிய நவபாசான நவாக்க்ஷரி யந்திரம் மற்றும் முருகபெருமானின் வேல், ஆபரணங்கள் போன்ற பொருட்கள் அனைத்தும் இங்கு எங்கோ தான் மறைக்கப்பட்டுள்ளதாகவும் பல நூல்களில் உள்ளது. எனவே இங்கு யாரும் வேடிக்கைக்காக கபிலவனம் செல்லக்கூடாது என்பது அறிவுறுத்தப்படுகிறது,
இந்த புனித இடத்தை பார்வையிட திட்டமிட்டால், நாம் ஒரு தூய்மையாக உடலிலும் உள்ளத்திலும், இருக்கவேண்டும். மேலும், பயணத்திற்கு குறைந்தபட்சம் 21 நாட்களுக்கு முன்பு மது, மாமிசம் தவிர்த்து பிரம்மச்சரியம் மேற்கொண்டு கடுமையான விரதம் மேற்கொள்ள வேண்டுமாம்.
மேலும், கபிலவனத்தில் ஆன்மீக சக்திகளின் காரணமாக, இந்த நடைமுறைகளுக்கு கீழ்ப்படியாதவர்கள் வீடு திரும்பும் வழியில் பல தடைகளை எதிர்கொள்வார்கள்.
இங்கு உள்ள காவல் தெய்வமான கடவற கலுபண்டா அப்பச்சி யானை வடிவில் வந்து விரதத்தை ஒழுங்காக மேற்கொள்ளாதவர்களை புனித புளியமரத்தை தரிசனம் செய்ய முடியாமல் விரட்டி அடிப்பது பல முறை நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இந்த கபில வனம் யாலா தேசிய பூங்காவின் மையத்தில் அமைந்துள்ளது. பிளாக் IV மற்றும் கபில வனத்தை சியம்பலாவா தேவலாயா தரிசனம் செய்ய மூன்று முக்கிய வழிகள் உள்ளன. இருப்பினும் இந்த வழிகள் அனைத்தும் யால காட்டில் உள்ளது.
எனவே, இது யாருக்கும் எளிதான சவாரி அல்ல. மிகவும் கடினமான இந்த இயக்கிக்கு வின்ச், ஸ்னாட்ச் பெல்ட், ஹை லிப்ட் ஜாக், கூடுதல் எரிபொருள் போன்ற பாகங்கள் கொண்ட நான்கு சக்கர வாகனம் தேவைப்படுகிறது.
ஆனால், நான்கு சக்கர இயக்கி மற்றும் இயந்திர திறன் கொண்ட அனுபவமிக்க இயக்கி தேவை. நீங்கள் ஒரு காட்டின் நடுவில் இருப்பதால், தங்குவதற்கு ஓய்வு இடங்கள் இருக்காது.
மேலும், இலங்கையில் அப்போதே முதல் அரசாங்க சிம்மாசனத்தில் யார் அமருவதாக இருந்தாலும் இங்கு சென்று வழிபட்ட பின் தான் தங்கள் அரச பதவிகளை ஏற்றுக்கொள்வது வழக்கமாக இருந்துள்ளது. பின்னர் வேற்று கிரக வாசிகளுக்கும் தொடர்பு உள்ளதாக இன்றும் நம்பப்படுகிறது.
முறையாக விரதமிருந்து இங்கு சென்று வந்தால் அடுத்த வருடத்துக்குள் நினைத்து சென்ற காரியம் நடக்கும். உங்கள் வாழ்க்கையே மாறும் என்பது அங்கு சென்று வந்த அனைவரின் அனுபவம்.