பிரிட்ஜில் காதலியின் சடலம்.. வேறொரு பெண்ணுடன் திருமணம்! திடுக்கிட வைக்கும் உண்மை சம்பவம்
காதலியை கொன்று பிரிட்ஜில் வைத்து விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த இளைஞரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாணவர்களின் நட்பு
இந்தியாவின் தலைநகரம் டில்லியின் நஜப்ஹர் எனும் நகரின் மிட்ரான் கிராமத்தை சேர்ந்த ஷகில் கெலாட் (24) என்பவர் மிட்ரான் கிராமத்தில் சொந்தமாக ஹோட்டல் ஒன்றை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் போட்டி தேர்வு பயிற்சிக்காக ஷகில் கெலாட் கடந்த 2018ம் ஆண்டு டில்லியிலுள்ள உட்டம் நகரில் பயிற்சி வகுப்பில் மாணவராக சேர்ந்துள்ளார்.
இதேவேளை அந்த வகுப்பிற்கு அரியானாவின் ஹஜ்ஜர் பகுதியை சேர்ந்த நிக்கி (22) என்ற இளம்பெண்ணொருவரும் மாணவராக சேர்ந்துள்ளார்.
இவர்கள் இருவரும் ஆரம்பத்தில் நண்பர்களாக பழக தொடங்கிய நிலையில், நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
காதலி கொலைக்கான காரணம்
இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே இடத்தில் வசித்து வந்துள்ளார்கள்.
இந்நிலையில் திருமணம் தொடர்பில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையில் ஷகில் கெலாட், நிக்கியை கொலை செய்துள்ளார்.
அவரை வெளியில் அடக்கம் செய்யாமல் தன்னுடைய ஹோட்டலிலுள்ள ஒரு பிரிட்ஜில் அடைத்து வைத்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்துள்ளார்.
மேலும் இந்த தகவல் பொலிஸாருக்கு தெரியவந்துள்ள நிலையில் ஷகில் கெலாட்டை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.