மோட்டார் அறையில் கேட்ட சத்தம்! சிறிது நேரத்தில் நடந்த திடுக்கிட வைக்கும் சம்பவம்
இந்திய மாநிலமான தமிழகத்தில் 94 வயது மூதாட்டியை தென்னந்தோப்பு மோட்டார் அறையில் சுவற்றில் அடித்து கொலை செய்துள்ள காதல் ஜோடியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியநேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் காளி முத்தம்மாள் (94). இவர் தனது தென்னந்தோப்பின் மோட்டர் அறையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்திய பொலிசாருக்கு, பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை தனது தோட்டத்தில் வேலை செய்து வந்த முத்துராக்கு என்ற பெண்ணை பாட்டி நடத்தை சரியில்லாததால் வேலையை விட்டு அனுப்பியுள்ளார்.
அவரை கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்ட போது, இரண்டு வாரத்திற்கு முன்பு முத்துராக்கு, அதே பகுதியைச் சேர்ந்த வடிவேலு என்பவருடன் மோட்டர் அறையில் இருந்ததை பாட்டி அவதானித்துள்ளார்.
இதனால் அப்பெண்ணின் நடத்தை சரியில்லாததால் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார். வேலையை விட்டு நிறுத்தப்பட்ட முத்துராக்கு செலவிற்கு பணமில்லாமலும், வேலை இல்லாமலும் இருந்ததால், எப்பொழுது பாட்டி கழுத்து காதுகளில் அணிந்திருந்த நகையினை கொள்ளையடிக்க வடிவேலுவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார்.
சம்பவத்தன்று வடிவேலுவுடன் தோட்டத்திற்கு வந்த முத்துராக்கு பாட்டியை மோட்டார் அறைக்கு கொண்டு சென்று சுவற்றில் அடித்து கொலை செய்ததோடு, அவரது கழுத்து மற்றும் காதில் இருந்த நகை 18 சவரனை கொள்ளையடித்ததோடு, காதில் இருந்த நகை கழட்ட வராததால் காதையே அறுத்து எடுத்துக்கொண்டு சென்றது தெரியவந்துள்ளது.
முத்துராக்கு கொடுத்த தகவலின் பேரில் வடிவேலுவையும் பொலிசார் கைது செய்து, இரண்டு பேரையும் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.