Bigg Boss 10: டிடிஎஃப்-ற்கு எதிராக முனியம்மா போட்ட முகமூடி... வெளியேறும் இரண்டு போட்டியாளர்கள்
Vijay Sethupathi Roast Munniyamma: பிக்பாஸ் நிகழ்ச்சியில் டிடிஎஃப்-ற்கு வரும் கைதட்டல்களைத் தடுப்பதற்கு முனியம்மா ஆடிய விளையாட்டை விஜய் சேதுபதி உடைத்துள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த நாட்களில் டிக்கெட் டூ பினாலே செல்வதற்காக டாஸ்க் நடைபெற்றது. அதாவது இதில் வெற்றி பெறுபவர்களுக்கு டிக்கெட் டூ பினாலே விளையாட்டின் போது சில சலுகைகள் கிடைக்கும் என்று பிக்பாஸ் கூறியுள்ளார்.
தற்போது 75 நாட்கள் கடந்து செல்லும் இந்நிகழ்ச்சியில், 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் அன்சர், வினோத், தன்யா இவர்களைத் தவிர மற்ற ஏழு பேர் நாமினேஷனில் இருந்து வருகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இரண்டு பேர் எலிமினேட் ஆகும் நிலையில் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஷாந்திகா, முகேஷ் இருவரும் வெளியேறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முனியம்மா போட்ட முகமூடி
முனியம்மா கடந்த சில நாட்களாக அன்சர், டிடிஎஃப் வாசனிடம் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இதில் அன்சரின் சண்டைக் குறித்து விஜய் சேதுபதி முனியம்மாவை பயங்கரமாக சத்தம் போட்டார்.
இந்நிலையில் டிடிஎஃப்-யிடம் ஏன் சண்டை போட்டீர்கள்? என்று விஜய் சேதுபதி கேட்டுள்ளார். இது உங்களது விளையாட்டு தந்திரமா? என்று கேட்டதற்கு முனியம்மா இல்லை என்று கூறினார்.
மேலும் டிடிஎஃப்-ற்கு வெளியிலிருந்து வரும் கைத்தட்டலுக்கு, இவரது உண்மையான முகத்தை காட்ட வேண்டும்.... நான் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று முனியம்மா மிரட்டலாக பதிலளித்துள்ளார்.
முனியம்மாவின் பதிலைக் கேட்ட விஜய் சேதுபதி மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் சிரித்துள்ளனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |