கோரத்தாண்டவமாடி வரும் கொரோணா! நோயாளிகளுக்காக ஆட்டோ ஓட்டி அசத்தும் ஆசிரியர்
கோவிட்-19 தொற்று கோரத்தாண்டவமாடி வரும் நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் ஒரு பள்ளி ஆசிரியர் கோவிட் நோயாளிகளுக்கு உதவ முன்வந்துள்ளார்.
நாளுக்கு நாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் மும்பையில் ஒரு தொழில்முறை ஆசிரியரான தத்தாத்ரய சாவந்த் (Dattatraya Sawant) என்பவர், மருத்துவமனை, கோவிட் மையங்கள் மற்றும் வீடுகளுக்கு நோயாளிகளை இலவசமாக அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ ரிக்ஷாவை இயக்கி வருகிறார்.
Dattatraya Sawant, a school teacher by profession and a part-time autorickshaw driver, gives free rickshaw rides to COVID patients
— VVS Laxman (@VVSLaxman281) May 1, 2021
He picks up and drops patients from hospital without charging them. Hats off to his noble initiative.
Pray that we overcome this soon?? pic.twitter.com/fieGYvWQCu
புறநகர் பகுதியான கட்கோபரில் வசிக்கும் சாவந்த், தன்யாசகர் வித்யா மந்திர் என்ற பள்ளியில் பகுதிநேர ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆசிரியராக இருந்தாலும் நோயாளிகளுக்கு உதவும் இந்த உன்னத சேவையில் அவர் ஈடுபட்டு வருகிறார். பிபிஇ கிட் (PPE kit) எனப்படும் பாதுகாப்பு கவச உடை அணிந்து கொண்டு இந்த சேவையை நோயாளிகளுக்காக தத்தாத்ரய சாவந்த் செய்து வருகிறார்.
நோயாளிகளை அழைத்து செல்வதால் தனது ஆட்டோவை சுத்திகரிப்பது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தவறாமல் கடைப்பிடித்து வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான விவிஎஸ்.லக்ஷ்மன், இது தொடர்பாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்ட ஒரு ஸ்டிலை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
அதில் சாவந்த் தனது ஆட்டோரிக்க்ஷாவைத் தவிர மஞ்சள் பிபிஇ கிட்டில் நிற்பதைக் காணலாம்.