பிறந்தநாள் பார்ட்டி வைக்க சொன்ன நண்பர்கள்! அதற்கு இளம்பெண் செய்த செயலால் போலீசார் கொடுத்த சர்ஃபரைஸ்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்த நிலையில், இந்தியாவில் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி பல உயிர்களை பலிவாங்கி வருகிறது.
இதனால், பொதுமக்கள் ஊரடங்கு, மாஸ்க் அணிவது, தனிமனித இடைவெளியை மேற்கொள்வது போன்றவற்றை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
மேலும் மத்திய, மாநில அரசுகளும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே, மும்பையைச் சேர்ந்த சமிதா பாட்டீல் என்ற பெண் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.
இதனால், அவரது நண்பர்கள் பார்ட்டிக்கு ஏற்பட்டு செய்யக்கூறி கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த அவர், இன்ஸ்டாகிராமில், கொரோனா நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது மட்டுமே சிறந்த பிறந்தநாள் பரிசு.
மேலும், கொரோனா காலத்தில் நண்பர்களின் உடல்நலனில் அக்கறை கொள்பவரே உண்மையான நண்பனாக இருக்க முடியும். எனவே எந்த கொண்டாட்டமும் வேண்டாம் என பதிவிட்டுள்ளார்.
இந்த உரையாடல் தொடர்பான ஸ்கீன் ஷாட்டை சமிதா மும்பை காவல் துறைக்கு டேக் செய்துள்ளார். இதைக்கண்ட காவல்துறை தனது பிறந்தநாளையும் பொருட்படுத்தாமல் கொரோனா பரவல் குறித்தும்,
தனது நண்பர்களின் பாதுகாப்பு குறித்தும் எண்ணிய சமிதாவை பாராட்டி மும்பை காவல்துறை அவரது முகவரியை பெற்று பொறுப்புள்ள குடிமகள் எனப் பெயர் பதித்த கேக் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளது. இதனை இணையத்தில் பகிர்ந்து சமிதா மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
Thank you @MumbaiPolice for making my day.
— समता (@samysays) April 22, 2021
Series of events: pic.twitter.com/64fzZkvzEs