மும்பையில் 1 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் பீடா- அப்படி அதிலுள்ள ரகசியம் என்ன தெரியுமா?
இந்தியர்களின் கலாச்சாரப்படி பீடா மக்களின் வாழ்க்கை முறையில் முக்கிய அங்கமாக மாறி விட்டது.
பீடாவை விஷேச வீடுகளில் சாப்பாட்டுக்கு பின்னர் விருந்தினருக்கு கொடுத்து மகிழ்வார்கள்.
10 முதல் 50 ரூபாய் வரையிலான விலைகளை இதனை கடைகளில் வாங்கி சாப்பிட்டீருப்போம். மாறாக வீட்டில் செய்து கூட சாப்பிடலாம்.
இப்படியொரு நிலையில், பீடாவை 1 லட்சத்திற்கு வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையைச் சேர்ந்த நௌஷாத் ஷேக் என்பவர் அவர் செய்யும் பீடாவை 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறாராம். அப்படி என்ன அந்த பீடாவில் இருக்கிறது என தொடர்ந்து நாம் பதிவில் பார்க்கலாம்.
1 லட்ச ரூபாய் பீடா
சமீபத்தில், நௌஷாத் ஷேக் மும்பையில் 1 லட்சம் விலையுள்ள பீடாவை விற்பனை செய்து வருகிறார். இந்த ஆடம்பரமான பீடா மும்பை- மாஹிமில் அமைந்துள்ள தி பான் ஸ்டோரி என்ற கடை விற்பனையாகிறது.
பாரம்பரியமான காடி கா பீடாக்கு ஒரு ராயல் டச் சேர்த்து விற்கிறார். "Fragrance of Love(அன்பின் வாசனை)" என்று பெயரிடப்பட்ட இந்த ஆடம்பரமான பீடாவின் விலையும் சேர்ககப்படும் பொருட்களும் ஆடம்பரமானது எனக் கூறப்படுகிறது.
இது குறித்து நௌஷாத் கூறுகையில், “மணமகனும், மணமகளும் தனது பானை சாப்பிட்ட பிறகு மகிழ்ச்சியாகி விடுவார்கள்...” என்று கூறியுள்ளார்.
பீடாவில் அப்படி என்ன உள்ளது?
பீடாவின் உள்ளு குங்குமப்பூ மற்றும் நறுமண வாசனை திரவியங்கள் சேர்க்கப்படுகின்றன. இளவரசன் மற்றும் இளவரசி என்று பெயரிடப்பட்ட இரண்டு தனித்தனி பெட்டிகள் மற்றும் தாஜ்மஹாலின் ஒரு பளிங்குப் பிரதிபலிக்கும் வகையில் பெரிய பெட்டியொன்றில் இந்த பீடா வழங்கப்படுகின்றது.
இப்படி வழங்குவதால் பீடா விருந்து முழுமையாகிறது என அவர் கூறுகிறார். இதனை சாதாரண மக்கள் பார்க்க முடியாதாம். மற்ற பீடாக்களை போல் இந்த பீடாவில் புகையிலை சேர்க்கமாட்டார் எனவும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |