எறும்பால் பானிபூரியை அலங்கரித்த சமையல்காரர்: கொந்தளிப்பில் நெட்டிசன்கள்
ஒரு சமையல்காரர் தாய்லாந்தில் உள்ள பாங்காக் உணவகத்துடன் இணைந்து புதுவிதமான பானிபூரி செய்முறையை உருவாக்கியுள்ளார். இது பானிபூரி பிரியர்கள் கொந்தளித்துள்ளனர்.
எறும்பு பானிபூரி
சமூக வலைத்தளங்களில் பல வித்தியாசமான வீடியோக்களை பார்த்திருப்போம். தற்போது உணவு சம்பந்தமான வீடியோக்கள் அதிகமாக வருகின்றது. இதை தவிர நாம் இருந்த இடத்தில் இருந்து கொண்டே பல உணவுகளை சமைக்கவும் சாப்பிடவும் கற்றுக்கொள்கிறோம்.
அந்த வகையில் மும்பையைச் சேர்ந்த ஒரு செஃப் ஒருவர், தக்காளி, புளித்த பீன்ஸ் மற்றும் தேங்காய் பால், அதோடு வித்தியாசமான முறையில் காரம் நிறைந்த செவ்வெறும்புகளையும் சேர்த்து கலவையான பானிபூரி செய்துள்ளது.
இந்த உணவின் புதிய முறை இணையவாசிகளை கடுமையான கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. இதில் வழக்கமான பானிக்கு பதிலாக தேங்காய்ப்பால் மற்றும் நறுமணப் பொருட்களை சேர்க்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இதை மற்ற பானிபூரியிலிருந்து விசேஷமாக்கும் வகையில் அதன் மேல் கசப்பான செவ்வெறும்புகளை சேர்க்கிறார்கள். இது உண்மையாக தயாரிக்கப்பட்ட ஒரு உணவாகும். இதற்கு பல நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |