தினமும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை... நாள் முழுவதும் சுறுசுறுப்பா இருப்பீங்க
ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படும் வேர்க்கடலையில் அதிகமான ஆரோக்கிய நன்மைகள் காணப்படுகின்றது.
விலை மலிவாக கிடைக்கக்கூடிய வேர்க்கடலை ஆரோக்கியம் மிகுந்த பொருட்களின் பட்டியலில் எப்பொழுதும் இருக்கின்றது.
ஆனால் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்றவற்றிற்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை வேர்க்கடலைக்கு கொடுப்பதில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
புரோட்டீன் முதல் ஆரோக்கியமான கொழுப்புகள் வரை, அத்தியாவசியமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் இந்த சிறிய வகை பயிர்களில் ஏராளமாக உள்ளது.
ஒரு கைப்பிடி வேர்க்கடலையின் பயன்கள்
நமது உடம்பிற்கு புரோட்டீன் ஊட்டச்சத்தின் அவசியம் அனைத்து செயல்பாடுகளுக்கும் முக்கியமாக இருக்கின்றது. ஒரு கைப்பிடி வேர்க்கடலையில் அதிகளவு புரோட்டீன் காணப்படுகின்றது. 7 முதல் 9 கிராம் புரோட்டீன் ஒரு கப் வேர்க்கடலையில் இருக்கும் நிலையில், இது ஒரு முட்டையில் காணப்படும் புரோட்டீன் அளவு ஆகும்.
ஆரோக்கியமான கொழுப்பு வேர்க்கடலையில் இருக்கும் நிலையில், ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்திருப்பதால் மூளையின் செயல்பாட்டை ஆதரிப்பதுடன், நாள்பட்ட நோய்கள் ஏற்படுதற்கான அபாயத்தையும் தடுக்கின்றது.
வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமான அமைப்பை மேம்படுத்துகின்றது. மலச்சிக்கல் ஏற்படுவதையும் தருகின்றது. மேலும் பசி ஏற்படாதவாறு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கின்றது.
உடல் எடையை பராமரிக்கவும், சர்க்கரை அளவுகளை சீராக வைத்துக்கொள்ள நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு அற்புதமான திண்பண்டமாகவும் இருக்கின்றது.
வேர்க்கடலையில் உள்ள வைட்டமின் E ஆன்டி-ஆக்சிடன்ட் ஆக செயல்பட்டு செல்களை சேதங்களிலிருந்து பாதுகாப்பதுடன், இதிலிருக்கும் நியாசின், ஃபோலேட் போன்ற பி வைட்டமின்கள் உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாகியுள்ளது.
மினரல்களை பொறுத்தவரை வேர்க்கடலையில் மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற நம் உடல் செயல்பாடுகளுக்கு அவசியமான தாதுக்கள் காணப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |