இந்தியாவில் இருந்து வெளியேறுகிறாரா முகேஷ் அம்பானி: காரணம் என்ன?
இந்தியாவின் பெரும் பாணக்காரரான முகேஷ் அம்பானி இந்தியாவை விட்டு குடும்பத்துன் வெளிநாட்டுக்கு செல்வதாக தகவல் வெளியான நிலையில், இதனை முகேஷ் அம்பானி தரப்பு மறுத்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.
இதற்கு முக்கிய காரணமாக மும்பையில் ஆன்டிலியா வீட்டில் தான் கொரோனா காலத்தில் அதிகமாக தங்கியிருந்தனர். இவரது வீட்டின் முன்பு வெடிகுண்டுடன் நிறுத்தப்பட்ட கார் சம்பவம் என்று கூறப்படுகின்றது.
தற்போது பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோன் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.
49 பிரம்மாண்டமான பெட்ரூம் உள்ள பக்கிங்ஹாம்ஷயர் ஸ்டோன் பார்க் இதற்கு முன்பு ஆடம்பர ஹோட்டல் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு தீபாவளி பண்டியைக் கூட முகேஷ் அம்பானி லண்டனில் தான் கொண்டாடினார்கள்.
குடும்பத்துடன் இங்கு குடியேர இருப்பதாகவும், சிறிய மருத்துவமனை மற்றும் கோவில் அமைப்பதற்கு ஏற்பாடு நடைபெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அம்பானி தரப்பில் ரிலையன்ஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில், லண்டனோ அல்லது உலகில் வேறு இடங்களிலோ இடம்பெயரும் திட்டம் முகேஷ் அம்பானிக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறோம்.
லண்டனின் ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை அண்மையில் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இந்தச் சொத்தை ஒரு தலைசிறந்த கோல்ஃப் மைதானமாக்கி, அதை ஸ்போர்டிங் ரிஸார்டாக மாற்ற வேண்டும் என்பதே ரிலையன்ஸ் நிறுவனத்தின் இலக்கு.
இதற்காக உரிய விதிமுறைகளை, உள்ளூர் நடைமுறைகளைப் பின்பற்றி இந்தச் சொத்து வாங்கப்பட்டுள்ளது. இது நிறுவனத்தின் விருந்தோம்பல் தொழிலை உலகளவில் எடுத்துச் செல்ல வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.