15000 கோடி மதிப்புள்ள முகேஷ் அம்பானி வீடு- எவ்வளவு ஆடம்பர வசதிகள் இருக்கு தெரியுமா?
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி பார்க்கப்படுகிறார்.
பணக்காரர்கள் பட்டியலில் உச்சத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதல் இடத்திலும், ஆசிய அளவில் 9 வது இடத்திலும் இருக்கிறார். முகேஷ் அம்பானியின் ஆடம்பரமான சொத்துக்களில் வீடு தான் முதல் இடத்தில் இருக்கிறது.
27 மாடிகள் கொண்ட ஆன்டிலியா, உலகின் இரண்டாவது மிகவும் விலையுயர்ந்த தனிநபர் வீடாக பார்க்கப்படுகின்றது. இதன் மதிப்பு சுமாராக ₹15,000 கோடி இருக்கும்.
இவ்வளவு பெரிய மாளிகையில் வெளியில் வராத அளவுக்கு ஆடம்பர வசதிகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில், ஆன்டிலியாவில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஹெலிபேடுகள் உள்ளதா?
இந்தியாவின் கட்டிடக்கலை சிறப்பு வாய்ந்த ஆன்டிலியாவில் உச்சியில் மூன்று ஹெலிபேடுகள் உள்ளன. அவை மும்பையின் வானலை மற்றும் அரபிக் கடலின் அற்புதமான காட்சியையும் வழங்குகின்றது.
ரிக்டர் அளவுகோலில் 8 அளவு வரை நில அதிர்வு நடவடிக்கைகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் தரையிறங்கும் தளங்கள் விரைவான மற்றும் எளிதான விமானப் பயணத்திற்காக கட்டப்பட்டுள்ளது.
வசதிகள்
1. மும்பையில் வரும் மோசமான வானிலையில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆன்டிலியாவில் ஒரு பனி அறை உள்ளது. ஒரு பட்டனை அழுத்தினால், அறை செயற்கை ஸ்னோஃப்ளேக்குகளை வெளியிடுகிறது இது குளிர்ச்சியாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
2. ஆன்டிலியாவில் 168 கார்களை நிறுத்தக்கூடிய மிகப்பெரிய பார்க்கிங் பகுதி உள்ளது. ஏழாவது மாடியில், ஒரு கார் சர்வீசிங் நிலையம் கூட உள்ளது.
3. ஆன்லியா அதிவேக லிஃப்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவை குடியிருப்பாளர்களையும் விருந்தினர்களையும் மாடிகளுக்கு இடையில் விரைவாகக் கொண்டு செல்ல முடியும். வீட்டை சுற்றிப் பார்ப்பதற்கு இலகுவாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
