அம்பானி வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா? அந்த விலைக்கு இன்னும் பத்து பங்களா வாங்கலாம்
பொதுவாகவே நம் எல்லோருக்கும் கனவு இல்லம் என்று ஒன்று இருக்கும் அந்த வீடு இப்படி இருக்கவேண்டும், அப்படி இருக்கவேண்டும் என்று பல ஆசைகள் வைத்திருப்போம். அப்படி உலகப் பணக்காரரான அம்பானி கட்டிய கனவு வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா?
அம்பானியின் வீடு
உலகில் உள்ள கோடீஸ்வரர்களின் வீடுகளிலேயே மிகவும் ஆடம்பரமான வீடாக குறிப்பிடப்படுவது முகேஷ் அம்பானியின் வீடுதான். இந்த வீட்டின் தோற்றமும் மதிப்பும் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்த இடத்தில் உள்ளது.
அம்பானியின் வீடானது மும்பையில் 4 இலட்சம் சதுர அடியில் 27 மாடிகளைக் கொண்ட அன்டிலியா வீடாகும். இந்த மாளிகை 8.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் வந்தாலும் அசையாமல் தூண் போல நிற்கும் வகையில் பல தொழிநுட்பங்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.
27 கட்டிடம் கொண்ட இந்த பிரமாண்ட வீட்டில் முகேஷ் அம்பானியின் குடும்பம், ஆனந்த் அம்பானி, ஆகாஷ் அம்பானி, ஷ்லோகா அம்பானி, பிரித்வி அம்பானி ஆகியோர் வசித்து வருகிறார்கள்.
15000 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த வீட்டில் 168 கார் கேரேஜ், 9 அதிவேக லிஃப்ட், 50 இருக்கை தியேட்டர், மொட்டை மாடி தோட்டங்கள், நீச்சல் குளம், ஸ்பா, ஹெல்த் சென்டர், கோவில் முதற்கொண்டு இருக்கிறதாம்.
இந்த வீட்டை 2006ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 2010 இல் தான் முடித்திருக்கிறார்கள் அமெரிக்க கட்டுமான நிறுவனமான ஹிர்ஷ் பெட்னர் அசோசியேட்ஸ். அம்பானி குடும்பத்தினர் இந்த பிரமாண்ட வீட்டிற்கு 2012ஆம் ஆண்டு குடிப்பெயர்ந்திருக்கிறார்கள்.
அம்பானியின் வீட்டை பராமரிப்பதற்கு மட்டும் 600 பணியாளர்கள் கொண்ட குழு ஒன்று வேலைப்பார்த்து வருகிறார்களாம். அவர்களுக்கு 2 இலட்சம் சம்பளம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |