யார் இந்த முகேஷ் அம்பானி: பணக்காரப் பட்டியலில் இடம் பிடித்து வெற்றியின் உச்சத்தில் இருக்கும் அம்பானியின் வெற்றிக்கதை!
பணக்காரர்களின் பட்டியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்ட முகேஷ் அம்பானியின் வளர்ச்சிப் பற்றிய சுவாரஸ்யப் பின்னணி தான் இந்தப் பதிவு.
பிறப்பு
முகேஷ் அம்பானி என்று அழைக்கப்படும் முகேஷ் திருபாய் அம்பானி மும்பையில் ஏப்ரல் 19ஆம் திகதி 1957ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார்.
இவரது தந்தை ஏடன் நகரில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் மாதச்சம்பளம் வாங்கும் சாதாரண ஊழியராகத்தான் முதன்முதலில் வேலைப்பார்த்திருக்கிறார்.
அதன் பின் தான் இந்திய வர்த்தக உலக ஜாம்பவான் என சொல்லப்படும் திருபாய் அம்பானி என போற்றப்பட்டார். இவரின் தாயார் கோகிலாபென் ஆவார்.
இவருக்கு அனில் அம்பானி, தீப்தி சல்கோன்கர் மற்றும் நீனா கோத்தாரி என்ற உடன்பிறப்புகளும் உள்ளனர். இவர் தனது ஆரம்பகல்வியை மும்பையில் உள்ள பள்ளியிலும் கல்லூரியில் படித்திருக்கிறார்.
தனது தந்தைக்கு வேலைகளும் பொறுப்புகளும் அதிகமாகவே தந்தைக்கு உதவியாக சில பொறுப்புகளை தனக்கென ஏற்றுக் கொண்டார்.
2002ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி மறைவுக்குப் பிறகு முகேஷ் மற்றும் அனில் ஆகியோர் சேர்ந்து குழும நிர்வாகத்தை கவனிக்கத் ஆரம்பித்து விட்டார்.
வாழ்க்கை
முகேஷ் அம்பானி நீதா அம்பானி என்றப் பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இஷா என்ற மகளும் ஆனந்த் மற்றும் ஆகாஷ் என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் மும்பையில் மிகவும் விலையுயர்ந்த பிரமாண்டமான அண்டிலியா என்ற 27 மாடிக்கட்டித்தில் வசித்து வருகின்றனர்.
இவர் தனது தொலைநோக்கப் பார்வையாலும், தொழில் பற்றிய ஆழ்ந்த சிந்தனையாலும் பல விருதுகளையும் வென்றிருக்கிறார்.
இவரின் அனைத்து உழைப்பும் உத்வேகமும் சேர்ந்து தான் உலகின் மிக வெற்றிகமான தொழிலதிபர்களில் ஒருவராக்கி வெற்றியின் உச்சத்தில் உட்கார வைத்திருக்கிறது.
நம்பிக்கையும் விடாமுயற்சி என்ற வெறியும் இருந்தால் நீங்களும் ஆகலாம் அம்பானியாய்.