முகேஷ் அம்பானி மகளுக்கு இரட்டை குழந்தை! பெயர் என்ன வைத்துள்ளார்கள் தெரியுமா?
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.
முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் தொழிலதிபர் ஆனந்த் பிரமலுக்கும் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் நேற்று இந்த தம்பதிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது, அதில் ஒரு குழந்தை பெண் மற்றும் மற்றொரு குழந்தை ஆண் குழந்தையாகும்.
பெண் குழந்தைக்கு ஆதியா எனவும், ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிலையன்ஸ் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 19 நவம்பர் 2022ல் எங்கள் குழந்தைகளான இஷா மற்றும் ஆனந்த் ஆகியோர் இரட்டைக் குழந்தைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இஷாவும் குழந்தைகளும் நலமுடன் உள்ளனர். இந்த மிக முக்கியமான கட்டத்தில் உங்கள் ஆசிகளையும் நல்வாழ்த்துக்களையும் நாங்கள் கோருகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.