நிச்சியார்த்த விழாவில் குடும்பமாக ஆட்டம் போட்ட அம்பானி! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
மும்பையில் உள்ள தொழிலதிபர் முகேஷ் அம்பானி, அவருடைய மகனின் நிச்சியதார்த்த நிகழ்வில் குடும்பத்துடன் மேடையில் ஏறிக் குத்தாட்டம் போட்ட வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானியின் நிச்சியதார்த்தம்
பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த அம்பானியின் நிச்சயதார்த்தம் அவரின் நண்பி ராதிகா மெர்ச்சன்ட்டுடன் நேற்றைய தினம் அவரின் வீட்டில் இடம் பெற்றுள்ளது.
இவர்கள் இருவரும் சுமார் இரண்டு ஆண்டுகளாக நண்பர்களாக இருந்துள்ளார்கள். மணப்பெண் ராதிகா மெர்ச்சன்ட், மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார்.
இதனை தொடர்ந்து மணமகன் ஆனந்த அம்பானி அமெரிக்காவிலுள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்கள் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் வாரியங்களில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.
மேலும் இவர் தற்போது RIL இன் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார்.
குழுவாக சேர்ந்து நடனமாடிய அம்பானி
இந்நிலையில் ஆனந்த அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் நேற்றைய தினம் மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் ஆன்டிலா வீட்டில் நிச்சயதார்த்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். மேலும் முகேஷ் அம்பாணியின் குடும்பத்தினர் அனைவரும் மணமக்களை மேடையில் கீழ் அமர செய்து விட்டு, மேடையில் ஏறி நடனமாடியுள்ளார்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் “ இது என்ன உங்கள் குடும்ப நடனமா?” என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
#WATCH | The Ambani family dances at the ring ceremony of Anant Ambani and Radhika Merchant
— ANI (@ANI) January 20, 2023
The engagement ceremony was held at Mukesh Ambani's Mumbai residence 'Antilla' yesterday pic.twitter.com/mmNsI9fzkc