முகேனின் அம்மாவா இவங்க? இளமை பருவ புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 3ல் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானவர் தான் முகேன் ராவ்.
மலேசிய தமிழரான இவருக்கும், இவர் பாடிய சத்தியமா சொல்லுறேன் டி என்ற பாடலுக்கு ரசிகர்களின் பட்டாளம் மிக மிக அதிகம்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிய முகேன், சமீபத்தில் தான் நடிக்கும் வேலன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் தற்போது முகேன் தனது தாயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி, அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில் முகேனும், அவரது தங்கையும் சிறு பிள்ளைகளாக அவரது அம்மா, தந்தையுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படமும், தனது தாயின் இளமைக்கால மற்றும் தற்போதைய புகைப்படத்தினை வெளியிட்டு வாழ்த்து கூறியுள்ளார்.
குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன், லைக்ஸையும் குவித்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முகேனின் தந்தை உயிரிழந்த நிலையில், அவரை நினைவு கூறும் வகையில், குடும்பமாக தாயின் பிறந்தநாள் கொண்டாடிய அரிய புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.