சென்னையில் இப்படியொரு இடம் இருக்கா? குறைந்தபட்ச பட்ஜெட்டில் என்ஜாய் பண்ணலாமாம்!
பொதுவாக நாம் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழமை.
இவ்வாறு செல்லும் போது நம்முடைய பட்ஜெட்டின் படி செலவுகள் அனைத்தும் இருக்க வேண்டும் என நினைப்போம்.
அப்படி சென்னையில் யாரும் பார்த்திடாத புதிய புதிய இடங்கள் இருக்கின்றன, இந்த இடங்களுக்கு செல்லும் போது மனதிற்கு இதமாகவும், குழந்தைகளுக்கு பயனுள்ள அனுபவங்களாக இருக்கும்.
அந்த வகையில் விடுமுறை நாட்களை ஒளிமயமாக கழிக்க வேண்டும் என்றால் சென்னையில் இருக்கும் கீழ்வரும் இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
1. முதலியார் குப்பம்
இந்த இடம் செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே உள்ளது. சென்னையில் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் இடமாக முதலியார் குப்பம் இருக்கின்றது.
இங்கு , சென்னை, புதுச்சேரி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணியரின் வருகை அதிகமாகவுள்ளது.
சுற்றி பார்க்க இயற்கையான ஏறி இருப்பதுடன் அங்கு படகு பயணங்களும் மேற்கொள்ளலாம். படகுகளில் 8 இருக்கைகள் மற்றும் 6 இருக்கைகள் இருக்கும்.
அத்துடன் நீர் விளையாட்டு நிகழ்ச்சிகளும் வாட்டர் ஸ்போர்ட்ஸ் பைக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. பல வகையான படகுகள் இருக்கின்றன. இதனால் பயணிகளின் தேவைக்கமைய நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்.
அந்த வகையில்,
1. எட்டு இருக்கைகள் கொண்ட விசைப்படகு - 3,000 ரூபாய்
2. மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகு ( 10 நிமி..) - 1,150 ரூபாய்
3. இரண்டு இருக்கைகள் கொண்ட மிதிப்படகு ( 20 நிமி..) - 300 ரூபாய்
இதன் காரணமாக இந்தியாவில் தமிழ்நாடு பக்கங்களில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகமாக இருக்கின்றது. முதலியார்குப்பம் மிகவும் இயற்கையான சூழலில் அமையப் பெற்றது.
பறவைகளைப் பார்வையிடுவோர்களின் சொர்க்கமாகவும் மற்றும் சுற்றுலாப் பயணிகள் புத்துணர்வு பெறும் தலமாகவும் விளங்குகிறது.
இவ்வளவு சிறப்புக்கள் பொருந்திய முதலியார் குப்பம் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |