மூட்டு வலியை நீக்கும் முடக்கத்தான் கீரை ரசம்... இப்படி செய்து பாருங்க
உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை இன்றியடையாதது.
அந்த வகையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் கீரை வகைகளில் முடக்கத்தான் கீரைக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது.
பல்வேறு நன்மைகள் கொண்ட மூலிகையாக விளங்கும் முடக்கத்தான் கீரை, எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர்பெற்றது.
குறிப்பாக, மூட்டு வலிக்கு முடக்கத்தான் கீரை ஒரு அருமருந்து என்றே கூறலாம். மூட்டு வலி மட்டுமல்லாமல், சளி, இருமல், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் இது சிறந்த தீர்வை கொடுக்கின்றது.
இவ்வளவு மருத்துவ குணங்கள் கொண்ட் முடக்கத்தான் கீரையை கொண்டு அசத்தல் சுலையில் ஆரோக்கியம் நிறைந்த ரசம் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முடக்கத்தான் கீரை (பொடியாக நறுக்கியது) -ஒரு கப்
பச்சை மிளகாய்- ஒன்று
புளி - கொட்டைப்பாக்கு அளவு
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
பொடித்துக்கொள்ள மிளகு - ஒரு தே.கரண்டி
தனியா - 2 தே.கரண்டி
சீரகம் -ஒரு தே.கரண்டி
துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
தாளிக்க தேவையானவை
கடுகு - ஒரு தே.கரண்டி
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
பூண்டு (நசுக்கியது) - ஒரு தே.கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர் எடுத்து அதில் முடக்கத்தான் கீரையைப் போட்டு அரை மணிநேரம் மூடிவைக்க வேண்டும்.
வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்து மசாலா பொருட்களை சேர்த்து வறுத்து, கொரகொரப்பான பதத்தில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடி கனமான பாத்திரத்திரமென்றை அடுப்பில் வைத்து புளியைக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள், பச்சை மிளகாய் ஆகியவற்றைச் சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் ஒரு கொதியில் பொடித்துவைத்த பொடியையும் முடக்கத்தான் கீரை ஊறிய சாற்றையும் சேர்த்து மீண்டும் ஒரு கொதி வரும்வரை வேகவிடுட வேண்டும்.
அதனையடுத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு ரசத்தைத் தாளித்து இறக்கி, முடக்கத்தான் கீரையைத் தூவினால் அவ்வளவு தான் மூட்டு வலிகளுக்கு நிவாரணம் கொடுக்கும் முடக்கத்தான் ரசம் தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |