சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த தோனி - மகிழ்ச்சியில் துள்ளி குதித்த ஆப்கன் வீரர்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் வீரரான ரஹ்மானுல்லா குர்பாஸுக்கு ஆட்டோகிராஃப் போட்ட சி.எஸ்.கே T.Shirtடை பரிசாக கொடுத்துள்ளார்.
சிஎஸ்கே கேப்டன் தோனி
இந்திய கிரிக்கெட்டில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் எம்.எஸ்.தோனி. இவருக்கு உலக அளவில் பெருந்திரளான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் சீசனில் முழங்காலில் காயம் ஏற்பட்டாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடிய கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.
போட்டி முடிந்த பின்னர், முழங்கால் அறுவை சிகிச்சைக்காக மும்பை சென்ற தோனி, அறு சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
T.Shirtடை பரிசாக கொடுத்த தோனி
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் வீரரான ரஹமத்துல்லா குர்பாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படம் கூடிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், சிஎஸ்கே கேப்டன் தோனி ஆட்டோகிராஃப் போட்ட T.Shirtடை பரிசாக கொடுத்துள்ளதாகவும், “இந்தியாவிலிருந்து பரிசுகளை அனுப்பியதற்கு நன்றி தோனி சார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Thanks @msdhoni sir for sending the gift all the way from india ❤️ pic.twitter.com/EaWtwz7CnY
— Rahmanullah Gurbaz (@RGurbaz_21) June 20, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |