MS Dhoni Net worth: ஆயிரம் கோடி தாண்டும் சொத்து மதிப்பு- பெறுமதி கேட்டு வாயடைச்சி போன ரசிகர்கள்
இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற கேப்டனாக மகேந்திர சிங் தோனியின் சொத்து மதிப்பு தொடர்பிலான விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஒப்பற்ற கேப்டனாக மகேந்திர சிங் தோனி இன்றைய தினம் 43வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இவர் எப்படி அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கினார் என்பது பலரும் அறிந்த விடயம்.
சாதாரண ஹவுசிங் போர்ட் வீட்டில் பிறந்த தோனிக்கு தற்போது ஏழு ஏக்கர் பரப்பளவில் பண்ணை வீடு இருக்கின்றது.
இது போன்று தோனியிடம் இருக்கும் சொத்துக்கள் தொடர்பிலான விவரங்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில்,
1. கார்கள்
- 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹம்மர் ஹெச் 2
- 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடி q7
- மிட்சுபிஷி பஜிரோ எஃப் எக்ஸ்
- 44 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரோவர் ஃப்ரீ லேண்ட்
- மகேந்திரா ஸ்கார்பியோ
- மூன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ளான ஃபெராரி எப் 99 gto
- 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஜீப் கிராண்ட்
- பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான நிசான் ஜோங்கா
- 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான gmc சியிரா
- மெர்சிடெஸ் பென்ஸ், ரோல்ஸ் ராய்ஸ் சில்வர் ஷேடோ
2. பைக்குகள்
தோனியிடம் சுமார் 70 வகைகளான பைக்குகள் இருக்கின்றது.
- 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஹார்லி டேவிட்சன் பைக்
- 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான கான்பிடேரட் ஹெலிகெட்
- 35 லட்சம் மதிப்புள்ளான டுகாட்டி 1098
- 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான கவாஸ்கி நிஞ்சா ஹச் டு
சொத்து மதிப்பு
தோனி நாடு முழுவதும் sports fit world என்ற நிறுவனம் மூலம் 200 ஜிம்கள் நடத்தி வருகிறார். மேலும், பல நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் தோனி இருந்து வருகிறார்.
ஆகமொத்தமாக தோனியிடம் சொத்து மதிப்பு மட்டும் 1040 கோடி ரூபாய் வரையிலான சொத்துக்கள் இருக்கின்றன.
அதிலும் ஆண்டுதோறும் சம்பளமாகவே தோனிக்கு 50 கோடி ரூபாய் வரை கிடைக்கும். உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் வீரராக தோனி பார்க்கப்படுகிறார்.
இவர் ஐபிஎல் மூலம் ஆண்டுதோறும் 12 கோடி ரூபாய் சம்பளம் வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |