படப்பிடிப்பு தளத்தில் சந்தித்துகொண்ட தல தோனி தளபதி விஜய்- இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படங்கள்!
தளபதி நடிகர் விஜய்யும், கிரிக்கெட் வீரர் தோனியும் சந்தித்துகொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நெருங்க உள்ள நிலையில் பயிற்சிக்காகவும் விளம்பர பட ஷூட்டிங் ஒன்றிற்காகவும் சென்னை வந்துள்ளார் தோனி.
இதனிடையே, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோஸில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அங்கேயே, கோகுலம் ஸ்டுடியோஸில் கிரிக்கெட் வீரர் தோனியின் விளம்பர பட ஷூட்டிங்கும் நடந்தது. இதனால், தோனியும் நடிகர் விஜய்யும் சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்துக்கொண்டனர். அவர்கள் சந்தித்துகொண்டு பேசிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
#MSDhoni #ThalapathyVijay ?? latest Photos ! #Beast pic.twitter.com/54pBgRETD0
— Cineulagam (@cineulagam) August 12, 2021