தோனி தன் மகளுக்கு இவ்வளவு பீஸ் கட்டுகிறாரா? அதுவும் மூன்றாவது படிக்கும் போதே...
3ஆம் வகுப்பில் படிக்கும் தோனியின் மகளுக்கு தோனி இவ்வளவு பீஸ் கட்டுகிறாரா என்று ஒரு விடயம் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கேப்டன் தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகப் பெரும் தூணாய் இருப்பவர் தான் மகேந்திரசிங் தோனி. மகேந்திர சிங் தோனி ஜூலை ஏழு ,1981 அன்று ராஞ்சியில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்.
உலக கிரிக்கெட் அரங்கில் நிலைநாட்டியவர் இவர், கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைத்து 2011ஆம் ஆண்டு இந்திய அணிக்கு உலக கோப்பையை வாங்கிக் கொடுத்து பெருமைப்படுத்தியவர்.
இப்படி கிரிக்கெட் உலகில் ஜாம்பவாக இருக்கும் தோனி ஆரம்பத்தில் டிக்கெட் கலெக்டராக வேலைப்பார்த்தவர் என்பது பலருக்கு தெரிந்திருக்காது. தோனி 2010ஆம் ஆண்டு ஜுலை 4ஆம் திகதி சாக்ஷி என்றப் பெண்ணை திருமணம் செய்தார். இநத தம்பதிகளுக்கு ஷிவா என்ற பெண் குழந்தையும் உள்ளார்.
மகளின் ஸ்கூல் பீஸ்
இந்நிலையில் தோனி பற்றிய ஒரு செய்தி ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது. அதாவது தோனி தனது மகளுக்கு ஸ்கூல் பீஸ் எவ்வளவு கட்டுகிறார் என்ற தகவல் தான் அது.
அதாவது தோனியின் மகள் தற்போது தான் 3ஆவது படித்து வருகிறார். அவர் படிக்கும் பள்ளியில் ஆண்டு கட்டணமாக 2.75 இலட்சம் ரூபா பீஸாக கட்டுகிறாராம். இது ஒரு மாதத்திற்கு 23 ஆயிரம் ரூபாவாம்.
மேலும், அந்தப் பள்ளியில் போர்டிங் வசதியும் இருக்கிறதாம் அதில் தோனியின் மகள் சேர்த்திருந்தால் மொத்தமாக 4.40 லட்சம் செலுத்த வேண்டியிருக்கும்.
இந்நிலையில் தற்போது தோனி மகளின் ஸ்கூல் பீஸ் விபரம் திடீரென இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |