தனுஷ் எனக்கு யாரு தெரியுமா? ஒரே வார்த்தையில் வாயடைக்க வைத்த மிருணாள் தாகூர்
தனுஷ்- மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள் என கடந்த சில நாட்களாக செய்தி வெளியாகி வந்த நிலையில், அதற்கு மிருணாள் கொடுத்த விளக்கம் வதந்திகளுக்கு முடிவுக்கட்டியுள்ளது.
தனுஷின் திருமண வாழ்க்கை
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ், சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.
கடந்த 10 வருடங்களாக கணவன்- மனைவியாக தொடர்ந்து இந்த திருமண வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் தரும் வகையில் அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ்- ஐஸ்வர்யா இருவரையும் சேர்த்து வைக்க அவரது குடும்பத்தினர் பல முயற்சிகள் செய்த போதிலும் இருவரும் அதற்கு இணங்கி போகாமல் பிரிந்து விட்டனர். இந்த விடயம் ரஜினிகாந்திற்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுபடுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது.
மனைவி பிரிந்த பின்னர் தனுஷ் சிங்கிளாக இருந்து வருகிறார். அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முயன்று வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
தனுஷ்- மிருணாள் தாகூர் உறவு
இந்த நிலையில், கடந்த சில நாட்களாகவே ஒரு தகவல் பாலிவுட், கோலிவுட்டில் தீயாக பரவிவருகிறது. அதாவது, தனுஷ்- மிருணாள் தாகூர் இருவரும் காதலிக்கிறார்கள். இப்போது அடிக்கடி டேட்டிங் செய்துவருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது.
“தேரே இஷ்க் மெய்ன்” திரைப்பட பார்ட்டியில் மிருணாள் கலந்து கொண்டார். அதே போன்று இதர பார்ட்டிகள், விழாக்களில் தனுஷ்-மிருணாள் தாகூர் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.
இதுவரையில் தனுஷின் சகோதரிகளை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்யாமல் இருந்த மிருணாள், இந்தக் கிசுகிசு வந்ததும் ஃபாலோ செய்ய ஆரம்பித்தார். இது போன்று பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
வாயடைக்க வைத்த மிருணாள் தாகூர்
இதற்கு விளக்கம் கொடுத்த மிருணாள் தாகூர், “"தனுஷ் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே. எங்கள் இருவரையும் இணைத்து பரவி வரும் வதந்திகளை பார்க்கும் பொழுது சிரிப்பாக இருக்கிறது. சன் ஆஃப் சர்தார் 2 நிகழ்வில் தனுஷும் கலந்துகொண்டார்.
அதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். மேலும், அஜய் தேவ்கன் தான் அந்த நிகழ்வுக்கு தனுஷை அழைத்து வந்தார். அதில் இரண்டு பேரும் கலந்துகொண்டது தான் இப்படி பேசுவதற்கு காரணம்..” என விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள்,“ வதந்திகளுக்கு இனியாவது முடிவுக்கு வரட்டும்..” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
