Mouth Wash: தினமும் மவுத் வாஷ் பயன்படுத்துவீங்களா? உங்களுக்கான எச்சரிக்கை பதிவு
இன்றைய நாட்களில் பலரும் மவுத் வாஷ் பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், இதில் பலருக்கும் தினமும் மவுத் வாஷ் பயன்படுத்தலாமா என்ற சந்தேகம் இருக்கும்.
ஏனெனில் கடைகளில் பல வகையான மவுத் வாஷ்கள் கிடைக்கின்றன, இவை அனைத்துமே தரமானதா என்றால் சந்தேகம் தான்.
சில மவுத் வாஷ்களில் ஆல்கஹால் கலக்கப்பட்டிருக்கும், இது பல் பிரச்சனைகளை தீவிரப்படுத்தி விடும்.
இந்த பதிவில் மவுத் வாஷ் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
தினமும் மவுத் வாஷ் பயன்படுத்தும் போது வாயில் வறட்சியை ஏற்படுத்திவிடும், ஒரு சில நேரங்களில் எரிச்சல் உண்டாகலாம்.
அளவுக்கு அதிகமாக பயன்படுத்தும் போது சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, சமீபத்திய ஆய்வின் முடிவில் ஒரு நாளைக்கு இரு முறை மவுத் வாஷ் பயன்படுத்தும் நபர்களுக்கு 55 சதவிகிதம் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதிலும் அபாயகரமாக புற்றுநோயை உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
எனவே மருத்துவரின் பரிந்துரைப்படி அளவுடன் பயன்படுத்துவதே சிறந்தது.