வாயில் ஒரு கிலோ தங்கம்: அதிர வைத்த பலே கடத்தலால் ஆடிப்போன அதிகாரிகள்
இந்தியாவில் பற்களில் மட்டும் மறைத்து வைத்து 951 கிராம் தங்கத்தை கடத்த முயன்ற நபரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்துள்ளனர்.
இந்த சோதனையில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த இருவர் தங்கம் கடத்த முயன்றது தெரியவந்துள்ளது. 951 கிராம் தங்கத்தை உருக்கி அதை பற்களில் ஒட்ட வைத்த கடத்த முயன்றுள்ளனர்.
இருவரையும் கைது செய்த பொலிசார் கடத்திவரப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்ததோடு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Officers of Customs AIU, IGI Airport apprehended 2 Uzbeki nationals on the night of 28th August coming from Dubai in the Green Channel. On search, 951 gms gold in form of dentures and a metallic chain was recovered from their oral cavity: Delhi Customs Zone pic.twitter.com/kcTl80yDt8
— ANI (@ANI) September 10, 2021