இவ்வளவு அழகான மலைப்பாம்பை பார்த்ததுண்டா? வைரலாகும் காணொளி
மோட்லி கோல்டன்-சைல்ட் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பு எனப்படும் அரிய வகை மலைப்பாம்பொன்றின் வியக்கவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இது ரெட்டிகுலேட்டட் பைத்தான் (Reticulated Python) என்னும் மலைப்பாம்பு ஆகும். இந்த மலைப்பாம்பு தமிழில் ராச மலைப்பாம்பு என்று அழைக்கப்படுகிறது.
இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு வகைகளிலேயே, ரெட்டிகுலேட்டட் பைத்தான் வகை பாம்புதான் மிகவும் நீளமான மற்றும் அதிக எடை உள்ள பாம்பு வகை ஆகும்.இது விஷமற்ற பாம்பு வகை ஆகும்.
ரெட்டிகுலேட்டட் பாம்பு 1 - 75 கிலோ எடை வரை வளரும் மற்றும் 23 - 29 ஆண்டுகள் வாழக்கூடியது. இந்த வகை பாம்புகளின் ஒரு அரிய வகையாக அறியப்படும் மோட்லி கோல்டன்-சைல்ட் ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்பின் அரிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |