முயற்சியை ஒளியாக தேர்ந்தெடு வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்!
முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கினங்க மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பல சமயங்களில் விழுந்து எழுந்திருப்போம். அந்தவேளையில் யார் துணையும் இல்லாமல் உங்களுக்கு கைகொடுப்பது உங்கள் முயற்சியும் தன்னப்பிக்கையும் தான்.
எதை தொட்டால் முடியாது என்ற புராணத்தை விட்டுவிட்டு முடியும் என்று நினைக்க தொடங்கினாலே அது வெற்றியின் முதல் படிதான். பல முறை முயற்சித்தும் தோல்வியை மட்டும் சந்தித்தால் அதுவும் ஒரு முயற்சிதான்.
ஏனெனில் மின்குமிழை கண்டுப்பிடித்து எம்மை வெளிச்சத்திற்கு கூட்டிச் சென்ற தோமஸ் அல்வா எடிசன் 99 தடவையும் தோல்வியை மட்டும் பார்த்து சலித்துப்போய் இறுதியாக முயற்சித்தது தான், உங்களையும் என்னையும் இன்று வெளிச்சம் எனும் பதத்திற்கு அடையாளம் காண வைத்திருக்கிறது.
உங்களுக்கு வாழ்க்கையில் எல்லாமே தடையாகத் தான் இருக்கும், பிறந்தது தடையாக இருக்கும் வளர்ந்தது தடையாக இருக்கும் படித்தது கூட தடையாகத்தான் இருக்கும்.
இப்படி பல தடைகளை தாண்டி நீங்கள் மேலே வந்தால் தான் வெளிச்சம் என்ற ஒன்று அல்லது உச்சம் என்ற ஒன்றை தொடுவதற்கு நீங்கள் தகுதியானவராக இருப்பீர்கள்.
நீங்கள் முயற்சிக்காமல் எந்த வேலையை தொட்டாலும் அது முயற்சிக்கு ஒரு இழிவு என்று சொல்வார்கள். அதனால் நீங்கள் எதையும் எடுத்தோம் முடித்தோம் என்று இடைவெளி விடாமல் முயற்சி என்ற ஒன்றை உட்புகுத்தி வெற்றியீட்டியே ஆகவேண்டும்
தினமும் நீங்கள் உங்களை ஊக்கப்படுத்துவதைப் போல் யாராலும் ஊக்கப்படுத்த முடியாது. உன்னால் முடியும் உன்னால் முடியும் என்று தினம் உன்னை நீயே ஊக்கப்படுத்திக் கொள்.
உங்களை ஊக்கப்படுத்த சில வரிகள்...
- தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே
- முட்களையும் ரசிக்க கற்றுக்கொள் வலிகளும் பழகிப்போகும்
- வேதனைகளை ஜெயித்துவிட்டால் அதுவே ஒரு சாதனைதான்
- குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி
- தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு
- மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே, தோல்வி பல கடந்து வென்றவர்களே
- நம்பிக்கையின் திறவுகோல் தன்ன(ந)ம்பிக்கையே
- மனதில் உறுதியிருந்தால் வாழ்க்கையும் உயரும் கோபுரமாக
- உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்
- எப்போதும் நம் மனதில் உச்சரிக்க வேண்டிய வாக்கியம் என்னால் முடியும்
- மனம் உங்களைக் கட்டுப்படுத்தும் முன் உங்கள் மனதைக் கட்டுப்படுத்துங்கள்
- தைரியம் பயத்தை விட ஒரு படி மேலே உள்ளது
- ஒவ்வொரு சிறிய மாற்றமும் பெரிய வெற்றியின் ஒரு பகுதியாகும்