பால் கேனில் குழந்தையை போட்டு கொலை செய்த தாய்... அம்பலமாகிய நாடகம்
குழந்தை ஒன்றினை தாய் ஒருவர் கொலை செய்து 5 நாட்கள் நாடகமாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையை கொன்ற தாய்
தேனி மாவட்டம் போடியை சேர்ந்த மணிகண்டன்(23) மற்றும் சினேகா(19) தம்பதியினர். கடந்த வருடம் இவர்களுக்கு திருமணமான நிலையில், சில மாதங்களில் கர்ப்பமாகிய இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
தாய் வீட்டிற்கு பிரசவத்திற்கு சென்ற சினேகாவின் தாய் மற்றும் தந்தை கேரளாவிற்கு வேலைக்கு சென்ற நிலையில், அவரது பாட்டி சரசு என்பவர் அவருக்கு துணையாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 22ம் தேதி காலையில் குளிக்க சென்றுவிட்டு திரும்பி வந்த போது குழந்தையை காணவில்லை என்றும் யாரோ தூக்கி சென்றுவிட்டதாக கூறியுள்ளார்.
பின்பு வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்ட பொலிசார் வீட்டிற்குள் சோதனை செய்த போது குழந்தை சடலமாக நீர் நிறைந்த பால் கேனிற்குள் இருந்துள்ளது.
இதனை அவதானித்த பொலிசார் பாட்டி சரசு மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் திருப்பம் என்னவெனில் குழந்தையை கொலை செய்தது தாய் சினேகா என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.
பின்பு சினேகாவை கைது செய்த பொலிசார் எதற்காக இந்த செயலை செய்துள்ளார் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |