Mothers of India: வெறும் 10 மாத வாழ்வு… 5 உயிர்களுக்கு ஒளி தந்து உடல் உறுப்புத் தானத்தில் வரலாறு படைத்த Aalin
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், மல்லப்பள்ளியைச் சேர்ந்த 10 மாதக் குழந்தை Aalin Sherin Abraham. சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்ட பின், அவரது பெற்றோரின் மனிதநேயத்தார் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 பேரின் வாழ்வுக்கு ஒளியூட்டியதுடன் மாநிலத்தின் மிக இளைய உறுப்பு கொடையாளியாகவும் மாறினார்.
தங்கள் குழந்தையை இழந்த பேரிடரான துயரத்திலும், அவரது பெற்றோர் அருண் மற்றும் ஷெரின் எடுத்த மனிதநேய முடிவு, இன்று பல உயிர்களுக்கு நம்பிக்கையாக மாறியுள்ளது. தங்கள் செல்ல மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர்கள் முன்வந்தனர்.
அதன் மூலம் Aalin-ன் உடல் உறுப்புகள் பலருக்கு புதிய வாழ்வையும், ஒருவருக்கு மீண்டும் பார்வையையும் அளித்தன. இவ்வாறு, கேரளாவின் மிக இளைய உறுப்பு கொடையாளராக Aalin Sherin Abraham வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
ஒரு குழந்தையின் வாழ்க்கை வெறும் 10 மாதங்களாக இருந்தாலும், அவள் விட்டுச் சென்ற மனிதநேயத்தின் தடம் பல தலைமுறைகளுக்கும் நிலைத்திருக்கும்.
மதம், மொழி, இனம், சாதி என எந்தப் பேதங்களையும் கடந்து, “மனித உயிரே முதன்மை” என்பதை தங்கள் துயரத்தின் மத்தியிலும் உலகுக்கு உணர்த்திய Aalin-ன் பெற்றோரின் பெருந்தன்மை உண்மையிலேயே போற்றத்தக்கது.
இந்த மகத்தான மனிதநேயத்திற்காக Aalin-ன் தாயார் ஷெரின் அவர்களுக்கு “Mothers of India 2026” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருப்பது, அந்தத் தாயின் தியாகத்திற்கும் தைரியத்திற்கும் கிடைத்த சிறப்பான அங்கீகாரம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |