viral video! துபாயில் இருந்து வந்த மகன்... மீன் விற்கும் தாய்க்கு சப்ரைஸ் கொடுத்த நெகிழ்ச்சியான தருணம்
பொதுவாகவே தாய் பாசத்திற்கு நிகர் வேறொன்றும் இல்லை என்று சொல்லுவார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் பல சம்பவங்கள் தினம் தினம் நடத்துக் கொண்டுதான் இருக்கிறது. அந்தவகையில் தற்போது இணையத்தில் உலாவரும் வீடியோ ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
தாய்க்கு சப்ரைஸ் கொடுத்த மகன்
மூன்று வருடங்கள் துபாயில் வேலை பார்த்துவிட்டு இந்தியா திரும்பிய ரோஹித் என்ற இளைஞர், கர்நாடகாவின் உடுப்பி, கந்தபுரா தாலுகாவில் உள்ள கங்கோலி மார்க்கெட்டில் மீன் விற்கும் தாய்க்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
குறித்த வீடியோவில், சந்தையில் மீன் விற்றுக் கொண்டிருந்த தனது தாயிடம் கைக்குட்டை, கண்ணாடி மற்றும் தலைமுடியால் முகத்தை முழுவதுமாக மூடிக்கொண்டு, சந்தையில் அவரை உடனடியாக அடையாளம் காண முடியாதபடி கூடையில் இருந்த மீன்களின் விலையைக் கேட்க ஆரம்பித்திருக்கிறார்
சிறிது நேரம் கழித்து, அந்த தாய் பேசியவரின் குரலை அடையாளம் முகத்தை விளக்கி பார்த்து அவரை அணைத்து ஆனந்தக் கண்ணீர் விட்டிருக்கிறார்.
இவர்களின் இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் அனைவரின் மனதைக் கொள்ளையடித்து வைரலாகி வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |