தனது உயிரைக் கொடுத்து மகள்களை காப்பாற்றிய தாய்... நடந்த சோகம் என்ன?
சென்னையில் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது மகளை காப்பாற்ற நினைத்த தாய், அவர்களை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரயில் மோதி தாய் பலி
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர்கள் சித்ரா. இவருக்கு சுபிக்ஷா (22), வர்ஷா (19) என்ற இரண்டு மகள்கள் உள்ள நிலையில், நேற்று முன்தினம் விடுமுறை தினம் என்பதால் சித்ரா தனது இரண்டு மகள்களுடன் தி.நகர் சென்றுள்ளார்.
அங்கு ஆடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொண்டு திருவல்லிக்கேணியில் உள்ள தங்களது வீட்டுக்கு செல்வதற்காக 3 பேரும் தி.நகரில் இருந்து கோட்டை ரயில் நிலையம் வந்துள்ளனர்.
பின்னர், வேளச்சேரி மார்க்கம் செல்லும் பறக்கும் ரயிலில் ஏறுவதற்காக தனது இரண்டு மகள்களுடன் சித்ரா தண்டவாளத்தை கடந்துள்ளார்.
அப்பொழுது அதிவேகமாக மின்சார ரயில் வருவதை அவதானித்த சித்ரா, அதிர்ச்சியடைந்ததுடன் ஓடிச்சென்று தனது மகள்களை தண்டவாளத்திலிருந்து தள்ளிவிட்டு காப்பாற்றினார். ஆனால் சித்ரா ரயில் மோதியதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |