மூன்று குழந்தைகளை கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்த தாய்: துயரத்திற்கு பின்னணி காரணம் என்ன?
கணவருடன் ஏற்பட்ட தகராறினால் தனது மூன்று குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு தாய் ஒருவர் தற்கொலைசெய்து கொண்ட சம்பவம் தமிழகத்தில் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் சலூன் பேட்டை பகுதியில் வசித்து வந்தவர்கள் தினேஷ்- ஜீவிதா. இத்தம்பதிகளுக்கு ஏழு வயதில் அக்ஷயா என்ற சிறுமியும், ஐந்து வயதில் நந்தகுமார் என்ற மகனும், ஆறு மாத கைக்குழந்தையும் இருந்துள்ளனர்.
மேஸ்திரி வேலை செய்து வந்த தினேஷுக்கும் ஜீவிதாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த ஜீவிதா தற்கொலை செய்வதற்கு முடிவெடுத்துள்ளார்.
தற்கொலைக்கு முன்பாக தனது குழந்தைகளையும் கொன்றுவிட நினைத்த அவர், தனது மூன்று குழந்தைகளையும் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையறிந்த அக்கம்பக்கத்தினர் பொலிசாருக்கு தகவல் தெரிநித்த நிலையில், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் தினேஷையும் பொலிசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.