மகளுக்காக டிஷ்யூ பேப்பரில் பூக்கள் செய்து இணையத்தையே தெறிக்க விட்ட அம்மா! இன்ப அதிர்ச்சியில் மகள்... வாயடைத்து போன பார்வையாளர்கள்
தாய்மார்கள் தங்கள் குழந்தையின் முகத்தில் ஒரு புன்னகையை வரவழைக்க என்ன வேண்டுமானாலும் செய்ய துணிவார்கள். சமீபத்தில் ஒரு இந்திய தாய் தனது மகளுக்கு டிஷ்யூ பேப்பரை பயன்படுத்தி ஒரு அழகான சடை பூவை உருவாக்கியுள்ளார்.
ஆனால் அந்த பூவானது நம்பமுடியாத அளவுக்கு இது உண்மையான பூக்கள் போன்றே தோற்றமளிக்கிறது.
my mom made this for me (from tissue paper) ❤️ pic.twitter.com/eISioFAmnM
— Surekha (@surekhapillai) February 22, 2021
இதனை சுரேகா என்ற யூசர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ட்விட்டர் யூசர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
‘அது எவ்வளவு அழகாக இருக்கிறது’ என்பதை காண்பிப்பதற்காக சுரேகா அந்த பேப்பர் மலர்கள் சூடிய வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.